மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla
மனசெல்லாம் மெல்ல மெல்ல
மரியே உன் பேரைச் சொல்ல
அகமே அகமே அருள் நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம்
ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்
இறைவன் வாழும் சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே (2)
அழிந்திடா பேழையே அழகானச் சோலையே
விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே
ஆணவத்தைத் தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே
இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உம்மைத் தேர்ந்தாரே (2)
ஆண்டவர் உம்மிலே வாழ்கின்றார் என்றுமே
அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே
ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் நன்றி சொல்லி போற்றுவோம்
Comments