இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey
இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே
புதுமைகளை புரியும் எங்கள் புனித அந்தோணியாரே
சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா
துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
துன்பம் பிணி வறுமைகளை களைபவரும் நீரே
ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே
அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே
சரணமய்யா......
நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே
நற்செய்தி போதித்த போதகரும் நீரே
உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே
சரணமய்யா......
பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே
உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே
கரமதில் பாலனை சுமந்து நின்றாயே
கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே
சரணமய்யா.....
Comments