வல்ல தேவன் ஆசி கூற வாரும் இந்நேரத்தில் உந்தன் சமூகம் தந்து தயவாய், Valla Devan Aasi Koora Vaarum Innerathil
வல்லதேவன் ஆசி கூற வாரும் இந்நேரத்தில்
உந்தன் சமூகம் தந்து தயவாய்
சேரும் இம்மன்றலிலே
1. ஏதேன் விசுவாசத்தை அர்த்தத்தோடாக்கினீர்
ஆதாமுக்கேவாளை ஆதரவாக்கினீர்
இல்லற வாழ்விலே அன்பின் ஊற்றாய்
ஓங்கிட ஆசி சொல்வீர்
2. தம்பதிகள் புது வாழ்வினுள் சேருங்கால்
காரணராகக் கரங்காட்ட முன் செல்வீர்
பூலோக செல்வங்கள் இவர்க்கு புத்திர பாக்கியமும்
பூரணமாகவே ஈந்தவர்க்கென்றும் நீர்
புகலிடம் ஆகிடுவீர்
Comments