மணமக்கள் தரும் நல் மங்கலப் பொருளை மகிழ்வுடனே ஏற்பீர் இறைவா, Manna Makkal Tharum Nal Mangalap Poorulai
மணமக்கள் தரும் நல் மங்கலப் பொருளை
மகிழ்வுடனே ஏற்பீர் இறைவா
மகிழ்வுடனே ஏற்பீர்
1. உந்தன் படைப்பில் உள்ளன எடுத்து
தங்கள் எளிய மனங்களை இணைத்து – 2
இந்நாளை இறைவா உந்தன் பொருளாய் – 2
நம்மையே தருகின்றோம்
தம்மையே தருகின்றார்
2. உடலும் உயிரும் ஒன்றாய் இணைத்தவர்
உன்னத பலிக்காய் அப்பமும் இரசமும் – 2
உம் திருவடிக்கே உவப்புடன் இன்று – 2
காணிக்கை அளிக்கின்றோம்
காணிக்கை அளிக்கின்றார்
3. காணிக்கை போன்று காக்கும் நற்கருணை
கனிவுற இவரை சேர்த்த உம் பெருமை – 2
விண்ணக தேவன் உமக்கே இறைவா – 2
பொன் மனம் தருகின்றோம்
பொன் மனம் தருகின்றார்
Comments