ஒளியே ஒளியின் ஒளியாம் இறை ஒளியை ஏற்றுவோம், Olliaye Olliyin Olliyan Irai
ஒளியே ஒளியின் ஒளியாம் இறை-ஒளியை
ஏற்றுவோம் – எங்கும் ஏற்றுவோம் (2)
வீடு எங்கும் – எங்கள் வீதி எங்கும்
நாடு எங்கும் – இந்த உலகமெங்கும்
இறையின் அருளால், அருளின் ஒளியை ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்..
ஒளியே.. ஒளியின், ஒளியாம் இறை-ஒளியை ஏற்றுவோம்… எங்கும் ஏற்றுவோம்
1. பார்வை வேண்டி, ஒளியைத் தேடும்
கண்கள் கோடி இங்கே…
போர்வை மூடி, உண்மை மறைத்து
வாழும் மனங்கள் இங்கே…
ஒளி- உண்மை நன்மையாம்
ஒளி- நீதி நேர்மையாம் (2)
தணலாய் எரியும் இறையின் ஒளியை
ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்.. (ஒளி)
2. ஒளியில் வாழும், இறைவன் உறவை
மண்ணில் வளரச் செய்வோம்…
ஞானகீதம், எங்கும் முழங்க
சேர்ந்து பாடிடுவோம்
ஒளி- உணவும் உயிருமாம்
ஒளி- வாழ்வும் வழியுமாம் (2)
கதிராய் வீசும் அணையா ஒளியை
ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்… (ஒளி)
Comments