வீணையும் நாதமும் சங்கமம் ஆனது தேவனின் அருளாலே திருமணம் நிகழ்ந்தது, Veenaium Naadhamum Sangamam Aanathu
வீணையும் நாதமும் சங்கமம் ஆனது
தேவனின் அருளாலே திருமணம் நிகழ்ந்தது
1. இயேசுவின் நாமத்திலே பேரருள் கிடைத்தது
இறைவன் சன்னதியில் இல்லறம் பிறந்தது (2)
பூவும் நறுமணமும் புதுக்கோலம் வரைந்தது (2)
தேனும் தீங்கனியும் திவ்வியமாய் கலந்தது
2. பண்பும் பாசமும் அன்புடன் இணைந்தது
பரிசுத்த ஆவியால் இருமணம் இணைந்தது (2)
பூவும் நறுமணமும் புதுக்கோலம் வரைந்தது (2)
இறைவன் சன்னிதியில் இல்லறம் பிறந்தது
Comments