Posts

அகழ்ந்திடுவார் தம்மை Agailinthiduvar thamimai

அகழ்ந்திடுவார் தம்மை -என்றும் அன்புடன் நிலம் தாங்கும் என்னதான் குறைகள் செய்தாலும் உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும் அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன்  நிழலில் உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வது உன்னாலே வல்லவன் நீயின்றி - என் இதயத்தில் நிறைவில்லை உந்தன் தாளில் கூடும் நானும் ஒன்றாவேன் உன்திரு நாளில் என்னுள்ளம் மங்களம் பாடும் தன்னில்லம் உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்

பெசன்ட்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

Image

அடைக்கலப் பாறையான இயேசுவே

அடைக்கலப் பாறையான இயேசுவே  அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2) நீரே எனது வலிமை நீரே எனது பெருமை நீரே எனது வாழ்வு இயேசையா (2) தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2) பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2) எந்தன் ஆதாரம் நீயல்லவோ –அடைக்கல போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)         உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)  என்னை மாண்புறச் செய்கின்றீரே –

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

Image
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு குன்று அசையலாம் குகைகள் பெயராலம் உலகம் முழுவதும் உன்னை  வெறுக்கலாம் என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது  அஞ்சாதே அஞ்சாதே  உன்னை நான்  காப்பேன் அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே அஞ்சாதே....

இரத்தம் திரு இரத்தம். Retham thiru Retham

  இரத்தம் திரு இரத்தம் என் இயேசுவின் திரு இரத்தம் -2 சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம் -2 நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய் -2 என் பாவத்தினால் அறைந்தேன் சிலுவையில் குத்தினேன் விலாவில் ஈட்டியாய் -2 விலாவிலிருந்து பொங்கிய இரத்தத்தை  என்மேல் விழச் செய்தார் -2 விழுந்தது அவர் இரத்தம் - நான்  அறிந்தேன் ஒரு சத்தியம் -2 இவரே மெசியா இவரே மெசியா -2  காயங்களேற்ற உம் கரங்களை நீட்டி  அருகில் ஓடி வந்திடுவாய் -2 உந்தன் இரத்த மேணியால் எந்தன் உடலை  சேர்த்து அணைத்துக் கொள்வாய் -2  என்னைக் சேர்த்தார்  உடலோடு - அவர்  கழுவினார் இரத்தத்தாலே -2  நீரே மெசியா நீரே மெசியா.

விடியலை தேடும் மனிதர்கள் நடுவில் விடிந்திடும் தேவன் நம் தேவன்

  விடியலை தேடும் மனிதர்கள் நடுவில்  விடிந்திடும் தேவன் நம் தேவன்  வறியவர் வாழ்வினில் வளமை சேர்த்து  வாழ்வு கொடுப்பவன் நம் தேவன்  விடுதலை  குருடர் எல்லோருக்கும் புதுப்பார்வை  செவிடர் முடவருக்கு புது வாழ்வு  பழமைத்தனங்கள் ஒழிந்திட  கோழைத் தனங்கள் அழிந்திட  பகைவர்கள் நண்பர்கள் ஆகிட  ஒளிரும் மிளிரும் அன்பால் இன்று  மலரும் புதிய உலகம்  ஏழைகள் எல்லோர்க்கும் நற்செய்தி  இளையவர் எல்லோர்க்கும் புதுச்செய்தி  அடிமைத்தனங்கள் ஒழிந்திட  போலித்தனங்கள் அழிந்திட  உழைப்பவர் உரிமைகள் பெற்றிட

உறவாகி உறவாகி வாழ்வாகி வழியாகி

  உறவாகி உயிராகி வாழ்வாகி வழியாகி   வழிகாட்டும் எம் இயேசுவே  உன்னிலே சரணாகதி  நலம் கண்டு நலம் வாழ வழி சொல்லித்தா  போராடும் என் வாழ்வில் வழி சொல்லித்தா  நீயின்றி நானில்லை வழி சொல்லித்தா  உன்னன்பில் யாம் வாழும் வழி சொல்லித்தா -எம்  கரம் பற்றி கரை சேர்த்து வழி சொல்லித்தா  இருளாகும் எம் வாழ்வில் வழி சொல்லித்தா  ஒளியாக சுடரேற்றி வழி சொல்லித்தா  தீதின்றி தினம் வாழ வழி சொல்லித்தா -உன்  திருவடியில் சரணடைய வழி சொல்லித்தா 

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்

  ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ - நானும் உறை பனி தனிலும் வெண்மையாவேன் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப என் மேல் இரக்கம் கொள்வீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமேன்

விண்ணப்பத்தைக் கேட்பவரே Vinnapathai ketpavare Lyrics Song

விண்ணப்பத்தைக் கேட்பவரே-என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி  ஆதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாக  என்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கக் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம்

என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்||En Iraiva En Iraiva Yen ennai Kai

Image
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2) என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள் ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள் ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும் எனக்கு துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்