உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்
*உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது.. எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது* _தியானம்:_ இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே. கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்: முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரி...