நீயே எனது ஒளி நீயே எனது வழி ||Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi|Chitra Songs


நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது வாழ்வு இயேசையா – (2)

நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் – (2)
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் – (2)

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே

துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – (2)
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – (2)

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு