ஏ அம்மா என் தாயே மாசில்லாத கன்னிகையே Ye Amma Yen Thaey Masillatha Kannikaiyae
ஏ அம்மா என் தாயே
மாசில்லாத கன்னிகையே
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
தங்கத்திலான உப்பரிகை
தாவீது வம்சத் தாய்மடி
சாரோனின் ரோஜாத் தோட்டம் நீ
ஆசிர்வதியும் அம்மா
ஆவியகன் உன்னதமே
ஆதிநாதன் ஆலயமே
செங்கோலை ஏந்தும் விண்ணரசி
ஆசிர்வதியும் அம்மா
தேவனின் தாயும் நீ
ஜீவனின் ராணி நீ
தாயான கன்னி மாமரி
ஆசிர்வதியும் அம்மா
Comments