Posts

Showing posts from January, 2024

அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே

Image
அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே அவரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 1.எத்தனையோ நன்மைகளை என்வாழ்வில் நீர் செய்பவரே, நன்றியுடன் நான் துதிக்கிறேன் நன்மைகளை நினைக்கிறேன் ! அவரே என் மறைவிடமே அவரே என் புகலிடமே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி வந்து நீர் உதவினீரே கரம்பிடித்து என்னை நடத்தினீர் கைவிடமாட்டீர் ! அவரே என் சமாதனரே அவரே என் துணையாளரே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 3.காற்றினிலே அலைகின்ற  இலைப்போல நான் திரிந்தேனே! நீர் வந்தீர் என் வாழ்விலே தஞ்சம்மானீரே ! நீரே என் கன்மலையே, நீரே என் காவலரே. நீரே என் அடைக்கலமே நீரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா

உலகத்தின் இரட்சகர் இயேசுவே அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார்

Image
உலகத்தின் இரட்சகர் இயேசுவே அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார் உயிர்த்தெழுந்த தேவன் அவர் அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர் நமக்காக உயிர்த்தார் நாம் பாவம் கழுவ தன்னை சிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) மேகங்கள் நடுவில் இடி முழக்கத்தின் தொனியில் ராஜாதி ராஜாவாய் இந்த அகிலத்தை ஆளுகை செய்வார் (2) இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே அகிலத்தை ஆள்பவர் இயேசுவே உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)

அஸ்திபாரம் இயேசு அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

Image
அஸ்திபாரம் இயேசு (2) அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே 1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான் 2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான் 3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

deva nee aavaranam maakento sreyaskaram దేవా నీ ఆవరణం మాకెంతో శ్రేయస్కరం

Image
దేవా నీ ఆవరణం మాకెంతో శ్రేయస్కరం ఒక ఘడియా యిచట గడుపుట మేలు వేయి దినములకంటేను 1. అద్బుత కార్యములు ఆ… జరిగించు దేవుడవు ఆ…. అనవరతమునీ మహిమలు పొగడ ఆత్మలో నిలుపుమయా అత్మతో సత్యముతో ఆరాధించగ మనసుతో ఆల్ఫా ఒమెగయు ఆత్మ రూపుడవు ఆనందించగ నీ మదిలో #దేవా# 2. అత్యంత పరిషుద్ధమౌ ఆ…. నీడుగూడారమున ఆ….. నివసించుటకు యోగ్యత నొసగి మమ్ము హెచ్చించితీవి నీ దయన్ జు౦టి ధారల కన్నాను తేనె మధురిమ కన్నాను శ్రేష్టమౌ నీదువాక్కులచేత- మము తృప్తి పరచుమయా #దేవా# 3. పరిషుద్ద సన్నిధిలో ఆ… పరిశుధ్దాత్ముని నీడలో ఆ…. పరిపూర్ణ హృదయముతో పరివర్తనముతో ప్రభునే ప్రస్తుతించెదం మా దేహమే ఆలయం కావాలి నీకే నిలయం ప్రాణ ప్రియుడవు పదముల చేరి – ప్రాణార్పణము జెతుము#దేవా#

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

Image
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய் 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் நீதியின் சூரியன் உன்மீது உத...

நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை | neer namba pannina unthan vakkukalai

Image
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே

அலையென ஆலயம் நுழைந்திடுவோம் ஆண்டவர் அருள்மொழி கேட்டிடுவோம்

Image
அலையென ஆலயம் நுழைந்திடுவோம் ஆண்டவர் அருள்மொழி கேட்டிடுவோம் எழுவோம் இறைகுலமாய் இங்கு உறவில் இணைய இறையடி செல்வோம் அவர் அன்பினைச் சுவைப்போம் உயிர்தரும் வார்த்தையின் ஒளியினிலே உன்னத இயேசுவின் வழி நடப்போம் பிரிவினை துறந்து நாம் ஒன்றிணைவோம் குடும்பமாய் இறைவனில் மகிழ்ந்திடுவோம் தன்னையே பலிதந்த இயேசுவுக்கு நம்மையே இணைத்து அளித்திடுவோம் மனிதனை மனிதனாய் மதித்திடுவோம் புதுவாழ்வு புது உலகம் கண்டிடுவோம்.

புனித சூசையப்பரை* *நோக்கி ஜெபம், மன்றாட்டு* *மற்றும் புகழ்மாலை*

Image
✝️🌷🌻🌷✝️🌷🌻🌷✝️ ✝️💐 மகா பாக்கியம் பெற்ற அர்ச். சூசையப்பரே ! 🧎‍♂️ ✝️💐 எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.🧎‍♂️ ✝️💐 தேவ தாயாரான ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். கன்னி மரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை இயேசு நாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால் 🧎‍♂️ *✝️ (விரும்பியதைக் கேட்கவும்.) ✝️*  ✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.🧎‍♂️ ✝️💐 ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே ! 🧎‍♂️   ✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். 🧎‍♂️ ✝️💐 ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! 🧎‍♂️ ✝️💐 நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும்....

அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் | Azlagana Ulagam Asaithadum Uyirgal

Image
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் அகலான இதயம் சுடரான வாழ்வு  தெய்வம் உந்தன் இல்லம் என் வாழ்வைப் பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய் வாழும் தெய்வம் நீயே செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய் தொடரும் இந்தப் பயணம் என் தாயாக நீ இருப்பாய் - தந்தை அன்பாலே அரவணைப்பாய் - நல் நண்பனாக வந்து துன்பத்தில் தோள் கொடுத்து இன்பப் பாடல் இசைப்பாய் பாதைக்கு விளக்காவாய் இந்தப் புவி வாழச் சிந்தும் மழையாக வந்து வளமை ஊட்டுகின்றாய் மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய் நான் சிட்டாகச் சிறகடிப்பேன் - உந்தன்  எழில் கண்டு கவி புனைவேன் - முழு மனிதனாக வந்து உறவுப் பாடம் தந்த இறைவன் ஆட்சி அமைப்பேன் சமந்தி மலரச் செய்வேன்

அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் | Arravanaikum Anbu Deivamey Yesuvey Adiyeduthu

Image
அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் எல்லாம் என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டும் சோகங்கள் பல கோடி சூழ்ந்திடும் வேளையில் - உன் சிறகினில் எனை மூடி அடைக்கலம் தர வேண்டும் உந்தன் புது உறவிலே கவலை எல்லாம் மறந்து  உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன் வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்  வல்லமைக் கரம் என்னில் இருந்திட வேண்டும் உந்தன்நல் துணையிலே பாதையினைத் தெரிந்து எந்நாளும் நிலைவாழ்வுப் பயணம் தொடர்வேன்.

தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர்

Image
தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர் வானமும் வையமும் யாவுமும் மாட்சிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா