கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்

பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே
பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே

நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்
நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்
நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்

1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்
முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்
உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்
முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்
உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்
அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய்

2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான்
மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் - நீ மேல எழும்பிடுவாய்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு