அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் | Azlagana Ulagam Asaithadum Uyirgal
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்
அன்பில் விளைந்த கனிகள்
அகலான இதயம் சுடரான வாழ்வு
தெய்வம் உந்தன் இல்லம்
என் வாழ்வைப் பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய்
வாழும் தெய்வம் நீயே
செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய்
தொடரும் இந்தப் பயணம்
என் தாயாக நீ இருப்பாய் - தந்தை அன்பாலே அரவணைப்பாய் - நல்
நண்பனாக வந்து துன்பத்தில் தோள் கொடுத்து
இன்பப் பாடல் இசைப்பாய்
பாதைக்கு விளக்காவாய்
இந்தப் புவி வாழச் சிந்தும் மழையாக வந்து
வளமை ஊட்டுகின்றாய்
மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று
நிறைவை என்னில் தந்தாய்
நான் சிட்டாகச் சிறகடிப்பேன் - உந்தன்
எழில் கண்டு கவி புனைவேன் - முழு
மனிதனாக வந்து உறவுப் பாடம் தந்த
இறைவன் ஆட்சி அமைப்பேன்
சமந்தி மலரச் செய்வேன்
Comments