இறைவனின் புனிதரே வாழ்க - இன்று இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம், Iraivanin Punnitharae Vazlga Intru Irranjii
இறைவனின் புனிதரே வாழ்க - இன்று
இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம்
அன்பர் அந்தோனியார் உம் அருளாலே - யாம்
அற்புத வரம் பல அடைந்தோமே
நன்மையின் நாயகனே கோடி நன்றிகள் சாற்றுகின்றோம் - 2
1. வாழ்வினில் துன்பங்கள் வருகையிலே
வந்தோம் உம் திருவடியே
உம் முகம் நோக்கிப் பார்க்கையிலே
உவந்து எம் துயர்களைத் துடைப்பீரையா
சமயம் பலவும் கடந்து உம்மைச்
சந்திக்கும் பக்தர்கள் மனதில் (2)
கவலை நீங்கிட கலக்கம் அகன்றிடக்
கருணை மழையை நீர் பொழியுமையா
2. அலகையின் ஆதிக்கம் உயர்கையிலே
அண்ணலே ஒடுக்குகின்றீர்
நோய்களும் பிணிகளும் வாட்டுகையில்
நலம் தரும் புதுமைகள் புரியுமையா
குழந்தை இயேசுவைக் கரத்தில் ஏந்திக்
கொஞ்சிடும் பேறு நீர் அடைந்தீர் (2)
வாழ்க புனிதரே வந்தோம் பாதமே
வளங்கள் தந்து வழிநடத்துமையா
Comments