புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 
      -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா 
     -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா  
     -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா 
      -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியாயே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
பதுவைப் பதியரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
விண்ணகத் திருவின் திருப்பெட்டியான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
மூப்பின் கீழமைச்சலுக்கு கண்ணாடியான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தர்மத்தை மிகவும் பின்தொடர்ந்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தர்மநெறியில் மாறாத மனதை கொண்டவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தூய்மையில் லீலி மலரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
இறைவனின் திருவசனத்தின் தொனிசத்தமான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
இஸ்பானிய நாட்டுக்கு நவநட்சத்திரமான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
விவிலியத்தை ஊக்கத்துடன் போதித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தூய ஆவியாகிய இறைவனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
அசுவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோணியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
புண்ணியவான்களுக்கு குறையற்ற படிப்பினையாகிய புனித 
அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
மீனோரென்கிற துறவிகளுக்கு படிப்பினையாகிய புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
அப்போஸ்தலர்களுடைய கொழுந்தான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
வழி தவறிப் போகிறவர்களுக்கு துணையான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
குற்றமில்லாத மக்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமாகிய புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
ஊமைகளைப் பேசச் செய்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
அடிமைப் பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
மரணமடைந்தவர்களை இறைவனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
பிறவிக் குருடருக்குப் பார்வை கொடுத்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
காணாமற் போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
வழக்காளிகளுடைய உண்மையை பாதுகாக்கிறவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
விண்ணகத்துக்கு சுதந்திரவாழியான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
கடலின் மீன்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
அப்போஸ்தலர்களுடைய குறையற்ற சுதந்திரத்தை நேசித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
புண்ணியமென்கிற ஞானவெள்ளாமையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
உலகம் என்னும் அபத்தத்தை புறக்கணித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
ஆழ்கடலில் தத்தளித்தவர்களை காத்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
சிற்றின்ப ஆசையை வென்றவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
எண்ணிறந்த ஆத்துமாக்களை விண்ணகத்தில் சேர்ப்பித்தவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
விஷம் இருக்கக்கண்டும் உணவு அருந்தினவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
நன்நாக்கு அழியாத நல்லவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
புதுமைகளினால் பிரபலியமானவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
ஐம்புலன் வென்றோருடைய சபைக்கு அரணான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
சிறுகுழந்தை வடிவம் கொண்ட இறைமகனை கையில் ஏந்தினவரான புனித அந்தோணியாரே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி . 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 
எங்களைத் தயை செய்து மீட்டருளும் சுவாமி .

               புனித அந்தோணியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! கவலை படுகிறவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவருமாய் ,பாவ அக்கினியை விரைவில் அமர்த்துகிறவருமாய் , உன்னத விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையுமாகிய இறைவன், எளியவர்களாகிய எங்களுக்கு விண்ணகப் பேரின்பம் தந்தருள மன்றாடுகின்றோம் 

முதல்    :  இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, 
துணை  : பதிவை பதியரான புனித அந்தோணியாரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
             எல்லாம் வல்ல இறைவா ! புனித அந்தோணியாரை தலைசிறந்த போதகராகவும் எங்கள் தேவைகளில் பரிந்து பேசுபவராகவும் உம் மக்களுக்கு அளித்தீரே .அவரது உதவியினால் நாங்கள் எப்பொழுதும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைக் கடைபிடிக்கவும் ,எங்களுக்கு நேரிடும் இன்னல்களில் எல்லாம் உமது ஆதரவைக் கண்டு உணரவும் செய்தருள வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் . - ஆமென் .

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு