மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்| Mannulagil Intru Deevan Irangii Varukirar lyric
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் - (2)
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்
Comments