பதுவை புனித அந்தோணியாரே உம் திருத்தலம் தேடி வந்தோம் |Paduvai Punitha Anthoniyarey Umm Thiruthalam Theedi vanthom Lyrics
பதுவை புனிதர் அந்தோணியாரே
உம் திருத்தலம் தேடி வந்தோம்
கடைக்கண் பாரும் கவலைகள் போக்கும்
குறையில்லா வாழ்வருளும் (2)
வாழ்க! வாழ்க!
எங்க பாதுகாவலர் வாழ்க - (2)
பாவிகளின் அடைக்கலமே
கவலைப்படுவோரின் தேற்றரவே (2)
ஆறுகள் காடுகள் கடந்து வந்தோம்
துன்பங்கள் துயரத்தில் சோர்ந்து வந்தோம்
உமை நாடி அருள் தேடி
நாங்கள் ஓடி வந்தோம்
பாவங்கள் யாம் செய்தாலும்
பரமனின் இரக்கம் பெறச் செய்வாய் (2)
உமது உதவி இல்லை என்றால்
எமக்கு இரங்குவார் யாருமில்லை
பரிவோடு எமைப்பாரும்
ஏக்கம் போக்கிவிடும்
Comments