எங்கள் புனிதா இதயத் தலைவா இசையில் வாழ்த்திடுவேன், Yenkal Punnitha Idhaiya Thalaiva Isaiil Vazlthiduven
எங்கள் புனிதா இதயத் தலைவா
இசையில் வாழ்த்திடுவேன் (2)
கலக்கம் போக்கி கருணை தாரும்
கனிந்த அன்பாலே
சோகம் எல்லாம் சுகமாய் மாறும்
துணையாய் வாழ்வில் நீ வந்தாலே
மரத்தின் கிளைகள் அசைவிலும்
பாடும் குயில்கள் இசையிலும் (2)
புனிதர் உமது புகழைப் பாடும் - (2)
புதுமைப் புனிதர் உமது நாமம்
வாழ்க வாழியவே
கடலில் எழும்பும் அலைகளும்
தென்றல் காற்றின் இனிமையும் (2)
புனிதர் உமது புகழைப் பாடும் - (2)
புதுமைப் புனிதர் உமது நாமம்
வாழ்க வாழியவே
Comments