குழந்தை இயேசுவுக்கு செபம் - Infant Jesus Prayer

 எங்கள் மீட்புக்காகப் பரம தந்தையிடமிருந்து இறங்கி தூய ஆவியினால் கருவாகி, கன்னியின் உதிரத்தை அருவருக்காமல் வாக்கே மனுவுருவாகிய மிகவும் இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்

பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்


உம் அன்னை வழியாக எலிசபெத்தம்மாளைச் சந்தித்து உம் முன்னோடியான அருளப்பரைத் தூய ஆவியினால் நிரப்பி அவருடைய தாயின் உதரத்திலே அவரை அர்ச்சித்தருளிய இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


ஒன்பது மாதம் கன்னித் தாயின் உதிரத்தில் அடைபட்டு புனித கன்னி மரியாவினாலும் புனித சூசையப்பராலும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்க்கப்பட்டு உலக மீட்புக்காக தந்தையாகிய இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


பெத்தலகேம் நகரில் கன்னிமரியாவிடமிருந்து பிறந்து துணிகளால் போர்த்தப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டு வானத் தூதர்களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனத்தில் காயப்பட்டு இயேசுவென்னும் மகிமை பொருந்திய பெயரைப் பெற்று, பெயரினால் இரக்கத்தினாலும் மீட்புப் பணிக்கு முந்தித் குறிக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


வழிகாட்டியாயிருந்த விண்மீனால் கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்குக் காண்பிக்கப்பட்டு தாயின் மடியில் தொழப்பட்டு, பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் என்னும் காணிக்கைகளைக்  கையேற்றுக் கொண்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்


கொடிய ஏரோதினால் சாவுக்குத் தேடப்பட்டு புனித சூசையப்பரால் தாயோடு எகிப்து நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டு கொடிய கொலையினின்று மீட்கப்பட்டு மாசற்ற மறை சாட்சியரின் புகழ்ச்சிகளால் மகிமையடைந்த இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


புனித கன்னிமரியாவோடும், முதுபெரும் தந்தையான புனித சூசையப்பரோடும் ஏரோதின் சாவு மட்டும் எகிப்து நாட்டில் தங்கியிருந்த இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


எகிப்து நாட்டினின்று தாயாரோடும் வளர்த்த தந்தையோடும் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிவந்து, பயணத்தில் பல துயரங்கள் அனுபவித்து, நாசரேத்தூரில் வாழ்ந்த இனிய பாலான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


 நாசரேத்தில் திரு இல்லத்தில் தாயாருக்கும் வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்திருந்து வறுமையிலும் துன்பங்களிலும் இன்னல் அனுபவித்து, ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளர்ந்த இனிய பாலானான இயேசுவே, எங்கள் பெயரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.


பன்னிரண்டு வயதில் எருசலேமுக்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்டு, தாயாராலும் வளர்த்த தந்தையாலும் தேடப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின் மகிழ்ச்சியோடு போதகர்கள் சபை நடுவில் காணப்பட்ட இனிய பாலானான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள்.

  

கன்னித்தாயினின்று பிறந்த திவ்விய இயேசுவே பரம தந்தையோடும் தூய ஆவியோடும் என்றென்றும் உமக்குத் துதி உண்டாகக்கடவது. - ஆமென்.


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு