மரியாயின் கீதம்

மரியாயின் கீதம் (எனப்படும்) அர்ச். தேவமாதா சுவாமியைப் புகழ்ந்து வசனித்த பத்து வாக்கியங்கள் (லூக். 1:46-55)

என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது.

என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது.

ஏனெனில் தமது அடிமையானவளுடைய தாழ்மையை கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளி னார்.  ஆகையால் இதோ இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள் ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார்.  அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

அவருடைய கிருபையும் தலைமுறை தலை முறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேலிருக்கின்றது.

அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார்.  தங்கள் இருதய சிந்தனையில்      கர்வமுள்ளவர்களைச் சிதறடித்தார்.

வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார்.

பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி தனவான்களை வெறுமையாய் அனுப்பி விட்டார்.

தமது கிருபையை நினைவுகூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை பரிக்கிரகம் (=ஆதரித்தார்.) பண்ணினார்.

அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ளகாலம் அவர் சந்ததியாருக் கும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு