இயேசுநாதருடைய திரு இருதயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - Personal Prayer Sacred heart jesus

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு எளியேன் (பெயர்) என்னையே கையளித்து ஒப்புக்கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும் படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இருதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இருதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இருதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.

          இனிய திரு இருதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர். நீரே என் உயிரில் ஒரே காவல், என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே, நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து, என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர்பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ.தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இருதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடித் தடுத்தருளும். ஓ.அன்புப் பெருக்கான இயேசுவின் திருஇருதயமே! என் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதேவேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.


எனவே உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஒரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இருதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன். - ஆமென்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு