புனித சவேரியாருடைய விருப்பமான செபம்
இயேசுவே, உம்மை உமக்காகவே அன்பு செய்கிறேன். ஏனென்றால் சிலுவை மரத்தில் உம் அன்பால் என்னை அணைத்துக் கொண்டீர். ஆணிகள், ஈட்டி, இகழ்ச்சிகள், மரணம் இவைகளை அனுபவித்து என்னை அரவணைத்தீர். நான் உமக்கு எதிராயிருப்பேன் என்று தெரிந்தும் எனக்காக இவ்வளவும் ஏற்றுக் கொண்டீர்! என்னை எப்பொழுதும் அன்பு செய்யும் இயேசுவே! உம்மை நான் ஏன் அன்பு செய்யக்கூடாது? நீர் மோட்சம் கொடுப்பீர் என்றல்ல! நான் அன்பு செய்வது அல்லது எரி நரகத்தில் தள்ளிவிடுவீர் என்பதற்காகவும் அல்ல. என்னை ஏற்றுக் கொண்ட உம் அன்பை முன்னிட்டு நான் உம்மை நேசிக்க துடிக்கிறேன். என்றென்றும் என் இதய வேந்தனாக இருப்பீராக!.
Comments