காலை ஜெபம் | Tamil Prayer
ஆண்டவர் இயேசுவே, எனக்காக மனுவுரு எடுத்தவரே! உம்மை ஆராதிக்கின்றேன். எனக்காக நற்கருணையில் வீற்றிருப்பவரே! ஆராதிக்கிறேன். "வாழ்வுதரும் உணவு நானே" என்றவரே! என் ஆன்ம பசியைப் போக்கும். இயேசுவே! உம் வார்த்தையை அனுப்பி என் அச்ச உணர்வுகள், என் தோல்விகள், கண்ணீர்கள், தனிமை, ஏக்கங்கள் அனைத்திலும் இருந்து விடுவித்தருளும். உமது காயத்தால் என் உடல் வாதைகள் அனைத்தையும் சுமந்தவரே! உமக்கு நன்றி கூறுகின்றேன்.எனக்கு சமாதானத்தை அருள வந்த உமக்கு, நான் என் பாவங்களால் துன்பங்களையே தந்தேன் ஐயா! என்னை மன்னியும். பாவிகளையே மீட்க வந்த தெய்வமே! என்பாவத்தை மன்னித்து புதுவாழ்வு தரபோவதற்காக நன்றி கூறுகிறேன். உமக்காக இரத்தம் சிந்தி தனது வாழ்வை உமக்காக அர்ப்பணித்த புனிதர்களைப் போன்று நானும்; அவர்களில் விளங்கிய மன வலிமையையும், தூய்மையான வாழ்வையும் என்னில் வளர்த்திட நிறைவான கிருபையையும்; உமது பலத்தை தூய ஆவி வழியாகவும் பெற ஆசீர்வதியும். தேவபயமும் தேவ பக்தியும்; நிறைந்த சாட்சியான வாழ்வு வாழ அருள் தாரும். இன்றைய நாளில் ஒவ்வொரு நிமிடமும் உமக்கு உகந்த மகனாக வாழவும், மற்றவரை உமது பாதையில் அழைத்து வரும் உமது கருவியாக மாறவும் வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செப்பிக்கிறேன். ஆமென்!
Comments