காலை ஜெபம்| Tamil Prayer
ஆண்டவரே இயேசுவே, படைகளின் ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றேன். என் துணையாளரே! உம்மைத் துதிக்கின்றேன். என் உள்ளத்தில் உறைபவரே! உம்மைப் புகழ்ந்து பாடுகின்றேன். உமது கைவினைப் பொருளாம் என்னை கைவிடாதேயும். "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாகக் கற்பிக்கும் இறைவா! உமக்கு நன்றி கூறுகின்றேன். குழந்தாய் எனக்கு செவிகொடு என்று பாவியான என்னை உம் விருந்திற்கு அழைக்கும் இயேசுவே! உமது மாறா பரிசுத்த அன்பில் இருந்து உம்மைப் பிரிந்து சென்ற நிலைகளை எண்ணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். உன்பாதத்தில் உமது அரவணைப்பை உணர மீண்டுமாக எனக்கு உதவி செய்யும். இன்னும் பிரிந்து இருக்கும் குடும்பங்களையும், அன்பான உறவுகளையும் உம் பாதம் தருகிறேன். அவர்களின் உறவுகளை உம் திரு இரத்தத்தால் மீண்டும் புதுப்பியும். கசப்பான உணர்வுகள் மறைந்து புதிய தொடக்கமாக மாற்றும். அனைத்துக் குடும்பங்களும் உம் மாட்சியை எடுத்துரைக்கும் நல் கிறிஸ்தவ குடும்பங்களாக மாற்றும். "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" என்பதை, நினைவில் கொண்டு; உமது பிரசன்னத்தில் என்னை முழுமையாக இணைத்து, உம் கல்வாரிப் பாதையை பய பக்கியுடன் நினைவில் கொண்டு நிலைவாழ்வை எமதாக்க அருள்தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். -ஆமென்
Comments