அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம், Anbu Deepam Idhayam Yenthii Sangamamavom
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம்
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம்.
1. வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
இறைவனே தம்மையே இறைவனே தம்மையே மனிதர்க்கு அளிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே
2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும்
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -2
அப்பமும் இரசமுமே அப்பமும் இரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நமை மறை உடலாக்கும்
Comments