உன் இல்லம் என்னும் ஆலயத்தில் நுழைகையிலே இறைவா, Un Illam yennum Aalaythil Nullaikaiyil Iraiva lyrics
உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் (2)
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் (2)
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் -2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை (2)
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே -2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்
Comments