வாருங்கள் இறை மக்களே கடல் அலையெனவே வாரீர், vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக
அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்
சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2
வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2
மனிதனில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
Comments