அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும், Anbinal Patriyerium Ullam Vendum
அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும்
அன்பினால் குறைகளையும் ஏற்க வேண்டும்
அனுதினமும் அரவணைக்கும் எந்தன் தெய்வமே
அடியெடுத்து வைக்கின்றோம் உந்தன் பாதமே
எமக்காக உயிர் நீத்த இயேசு தெய்வமே
உம்முகமே காணாமல் உம்குரலே கேளாமல்
வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ
உம்மிரக்கத்தில் யாம் வாழ வேண்டும்
உம்மிதயத்தில் யாம் துயில வேண்டும்
உமதன்பினால் யாம் வளர வேண்டும்
வல்லமையால் வழிநடத்தும் வல்ல தேவனை
வாயார வாழ்த்தாமல் உளமாரப் பாடாமல்
வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ
உம்மிரக்கத்தில் யாம் சுவாசிக்கின்றோம்
உம்மிதயத்தில் யாம் வாழ்வு காண்கின்றோம்
உமதன்பினால் யாம் நிறைவு பெறுகிறோம்
Comments