அழகான உலகம் ஒன்றை கண்டேன் இறைவா, Azlagana Ullagam Ontrai Kannden Iraiva
அழகான உலகம் ஒன்றை நான் கண்டேன் இறைவா
அது அன்பும் பகிர்வும் ஒர் நிலை தலைவா
அன்பே வாழ்வாகிட பகைமை அழியக் கண்டேன்
உறவில் உண்மை இணைந்திடவே
மனங்கள் மகிழக் கண்டேன்
அதுவே உனதாட்சி என உணர்ந்தேன்
வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே
அன்பும் உறவும் பெருகி மனித இனமும் வாழவே
பகிர்வு வளர்ந்திடவே வறுமை ஒழியக் கண்டேன்
நீதியும் நேர்மையும் தளிர்த்திடவே
மனிதம் மலரக் கண்டேன்
அதுவே உனதாட்சி என உணர்ந்தேன்
வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே
பகிர்வு நீதி பரவி மனித இனமும் வாழவே
Comments