அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே, Annaithilum Uyar Neeri Anbey Anbey Anbey
அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே
அதனை அனைவரும் ஏற்றிப் போற்றுவோம்
ஏற்று வாழுவோம்
மண்ணோர் மொழிகள் பேசிடினும்
விண்ணோர் மொழிகள் பேசிடினும்
அன்பு நமக்கு இல்லையெனில்
ஒலிக்கும் வெண்கல நிலையாவோம்
அறிவு அனைத்தும் இருந்தாலும்
மறைநூல் யாவும் தெரிந்தாலும்
அன்பு நமக்கு இல்லையெனில்
நம்மில் ஒன்றும் பயனில்லை
மலையைப் பெயர்க்கும் அளவுக்கு
மாண்புறு விசுவாசம் இருந்தாலும்
மனதில் அன்பு இல்லையெனில்
மண்ணில் நமக்கு என்ன பயன்
உடைமை யெல்லாம் கொடுத்தாலும்
உடலைத் தியாகம் செய்தாலும்
அன்பு நமக்கு இல்லையெனில்
நம்மால் நமக்கு என்ன பயன்
Comments