உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - Ummidam Adaikalam Pugunthen Iraiva Ummidam
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் (2)
அன்பு தேவன் நீ அருகிருக்கையில்
ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன்
அன்பையும் அறிந்திடுவேனே
1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்
அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்
நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுங்கலாம்
தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்
இறைவா நீ என்னைக் கைவிடாய்
துணையாய் நீ என்னுள் உறைந்திட்டாய்
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்
2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்
உரிமை காக்க உழைப்பதனால் உயிரைச் சிதைக்கலாம்
பொதுநலனைப் பேணுவதால் பெயரை இழக்கலாம்
வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்
இறைவா நீ ... ...
Comments