காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே - Kaakum Yenthan Anbu Deivamey Kalam Thoorum
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே
எம்மைக் காத்திடுவாய்
1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே
உள்ளம் நொறுங்கி உடையும் வேளை
உன்னைத் தேடி ஓடி வந்தேன்
கருணை தெய்வமே கரங்கள் தாருமே
2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்
பாலைநிலத்தில் நடத்தினாய்
கடலை அடையத் துடிக்கும் ஆறாய்
உந்தன் வழியாய் நடக்க வந்தேன்
உடனே வாருமே உதவி தாருமே
Comments