அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ - Anbe Yenthan Aaruirey Anbal Uyiraith Thanthanaiaye
அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ
துன்பம் உனக்கு நான் தந்தேன் - மன்னித்து என்னை ஏற்பாயே
1. சிலுவை உனக்கு அரியணையோ சிந்திய ரத்தம் மேலாடையோ
கூரிய முள்தான் உன் முடியோ கூடிய காயம் உன் அழகோ
2. கரங்கள் விரித்து இருப்பதேனோ கனிவுடன் உன்னோடணைத்திடவோ
கண்களில் இன்னொளி குன்றியதேனோ காரிருள் நின்று மீட்டிடவோ
3. உலகில் சிலுவைப் போதனையோ உயர்ந்ததாய் நீயும் தந்தனையோ
நண்பனுக்காய் உயிர் தருவதைப்போல் அன்பில்லை என்று உரைத்தனையோ
Comments