கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை - Kalvari Malaiaye Noki Deivamey Nee Thananthaniaye Tharaiyil
கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ
தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை
சுமப்பதும் ஏன் முத்தமிட்டு நண்பனே
காட்டி கொடுத்த துரோகமோ
புதிய உலகம் புதிய இதயம் காணும் லட்சிய நோக்கமோ
1. பாவி என்று யாரையும் நீ வெறுக்கவில்லை
தவறு செய்தால் தட்டிகேட்க மறுத்ததில்லை
உந்தன் குரலை கேட்டும் நீதிகேட்டு பயந்தனர் மிகப்பெரியவர்
உன்னை பாரும் அந்த சிலுவை மரத்தில்
அறைந்தனர் அந்த கொடியவர்
அன்பு செய்தவன் நீ ஈர நெஞ்சவன் நீ
தந்தாய் இவர்களை மன்னியும்
தெரியாமல் செய்கிறார்கள் என்ற உன்
மனது பெரியது உந்தன் இதயமும் பெரியது
2. சாதி என்றும் மதங்கள் என்றும் - பிரிக்கும் உலகில்
பணம் பதவி மோகம் என்றும் மோதும் உலகில் இந்த குறையை நீக்க
அன்பு என்னும் பெயரை தந்தவர் நீர் அன்றோ
அன்புக்காக சிலுவை மரத்தில் ரெத்தம்
சிந்தியது நீயன்றோ
உடலை தந்தவன் நீ உயிரை ஈந்தவன் நீ
நண்பனுக்காக உயிரையும் தந்திடும் அன்பே - உயர்ந்தது
அதை தந்த உன் அன்பு உயர்ந்தது
இதிலும் பெரியது வேறில்லை
Comments