உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் - Unakaga Maritheney yenakaga nee yenna Seithai

உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் - 2

1. திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் -2
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் 
2. சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றேன்
சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் -2
சிலுவை சுமையை எனக்குத் தந்தாய்

3.முழு முதல் கடவுளை தேடச் சொன்னேன்
முதல்முறை தரையில் தள்ளி விட்டாய்-2
முதல்முறை தநையில் தள்ளி விட்டாய்

4. அருள் மிக நிறைந்த என் தாயே
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் - 2
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய்

5. என் சிலுவையை சுமக்க நான் உன்னை தேடினேன்
சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய் - 2
சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய்

6. முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன்
இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் - 2
இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய்

7. எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2

8. அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2
ஐயோ அதையும் கேலி செய்தாய் 

9. உறவே உறவே மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய் - 2
உடைத்து உடைந்து தள்ளி விட்டாய்

10. சுய நல ஆடையை நீ கொண்டாய் - என்
பிறர் நல ஆடையை உரிகின்றாய் - 2
பிறர் நல ஆடையை உரிகின்றாய்

11. அன்பு அன்பு அன்பே என்றேன்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் - 2
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய்

12. இதற்கு மேல் என்ன நான் தருவேன் 
உயிரையும் தந்தேன் உணர்வாயோ - 2
உயிரையும் தந்தேன் உணர்வாயோ

13. பாசத்தின் மடியில் என்னையும் பார்
கதறுகிறான் என் தாயை பார் - 2
கதறுகிறான் என் தாயை பார்

14. நான் புதைந்தேன் என நீ வருந்தாதே
நான் / புதையும் வரை உயிர்க்காதே -2
நான் / புதையும் வரை உயிர்க்காதே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு