Posts

Showing posts from February, 2023

எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் |el shaddai nambuven uyirullavarai ummaye

Image
எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே! உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம் எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் | karthar unnai nithamum nadathi

Image
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் துதிப்போரை கை விட மாட்டார் நுகத்தடி விரல் நீட்டை போக்கி நீபச் சொல்லை நடு நின்று நீக்கி கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் துதிப்போரை கை விட மாட்டார்

உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக || Unnathangalile iraivanuku maatchimai

Image
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக  உலகினிலே நல்மனத்தவர்க்கு  அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர் உலகின் பாவம் போக்குபவரே எம்மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர் ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்  மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமேன்.  

மரியன்னை மன்றாட்டு மாலை

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா தூய்மை நிறை மூவொரு இறைவா புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவனின் புனித அன்னையே கன்னியருள் சிறந்த கன்னியே கிறிஸ்துவின் அன்னையே இறையருளின் அன்னையே தூய்மைமிகு அன்னையே கன்னிமை குன்றா அன்னையே அன்புக்குரிய அன்னையே வியப்புக்குரிய அன்னையே நல்ல ஆலோசனை அன்னையே மீட்பரின் அன்னையே திருச்சபையின் அன்னையே அறிவுமிகு அன்னையே போற்றுதற்குரிய அன்னையே வல்லமையுள்ள அன்னையே தயையுள்ள அன்னையே நம்பிக்கைக்குரிய அன்னையே நீதியின் கண்ணாடியே ஞானத்திற்கு உறைவிடமே எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே ஞானப் பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே பக்தி நிறை பாத்திரமே மறைபொருளின் நறுமலரே தாவீது அரசரின் கோபுரமே தந்த மயமான கோபுரமே பொன் மயமான ஆலயமே உடன்படிக்கையின் பேழையே விண்ணகத்தின் வாயிலே விடியற்காலையின் விண்மீனே நோயுற்றோரின் ஆரோக்கியமே பாவிகளுக்கு அடை...

மங்களம் மங்களம் மங்களமே ,Mangalam Mangalam Mangalamae

Image
மங்களம் மங்களம் மங்களமே 1. மணமக்கள் மாண்புரவே மணவாழ்வு இன்புரவே மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ 2. ஆதாமும் ஏவாளோடும் ஆபிரகாம் சாராளோடும் ஆதியில் ஆண்டவன் அனாதி திட்டம்போல் ஆண்பெண்ணும் சேர்ந்திடவே ஆ ஆ ஆ 3. இல்லறம் நிலங்கிடவே நல்லறம் தொலங்கிடவே வல்லவன் வான்பதன் வழிகாட்டும் வார்த்தையில் பல்லாண்டு வாழ்ந்திடவே ஆ ஆ ஆ

கானாவூரின் கல்யாணத்தில் தான் | Kaanavorin kalyaanaththil thaanTheyvamakan thaamae puthumai seythaar

Image
கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வமகன் தாமே புதுமை செய்தார் 1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் ஆகா நான் எங்கு காண்பேனோ இயேசு என் நேசர் போல் 2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார் தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் ஆகா நான் எங்கு காண்பேனோ நேசர் என் இயேசு போல்

சிலுவைப் பாதையின் 14 நிலைகள்|| 14 Stations of Way of the Cross

Image
1. இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார் Jesus is  Condemned to Death 2. இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள் Jesus takes up his Cross 3. இயேசு முதல் முறை தரையில் விழுகிறார் Jesus falls for the first time 4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார் Jesus meets his mother Mary 5. சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார். Simon of cyrene helps Jesus carry the Cross 6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் முகத்தைத் துணியால் துடைக்கிறார் Veronica wipes the face of Jesus 7. இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார் Jesus falls for the second time 8. இயேசு எருசலேம் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் Jesus meets the women of Jerusalem 9. இயேசு  மூன்றாம் முறை நரையில் விழுகிறார் Jesus falls for the Third Time 10. இயேசுவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள் Jesus is stripped of his garments 11. இயேசுவை சில...

அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் Azlagai Nirkum Yar Ivargal

Image
அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் போர்களத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் 3. தனிமையிலும் வறுமையிலும் இலாசர் போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் 4. எல்லா சாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின்கீழ் இயேசு இரத்தத்தால் சீர்போராட்டம் செய்து முடித்தோர் 5. வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு வெள்ளை குருத்தாம் ஓலைப் பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனமுன் ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகம் அடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை 7. ஆட்டுகுட்டிதான் இவர் கண்ணீரை ஆறஅகற்றி துடைதிடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றிற்கு அள்ளிப்பருக இயேசுதாமே

ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை அருளிச் செய்தீரே|| Aadhiyil Aethaenil Aathaamuk Kaevaalai Arulich Seytheerae

Image
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை அருளிச் செய்தீரே அவ்விதமாகவே இவ்விரு பேரையும் இணைத்தருள்வீரே 1. மங்களமாய் திருமறையைத் தொடங்கி மங்களாமாய் முடித்தீர் மங்கள மா மணவாளனாய் மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர் 2. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக் கருள் புரிந்தீரே அங்ங்னமே இந்த மங்களம் செழிக்க ஆசியருள்வீரே 3. கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம் காத்தரே வந்திடுவீர் காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர் 4. இன்பமும் துன்பமும் இம்மண மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை அணுகச் செய்திடுவீர்

ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் |Aathiyilae Oru Kalyaanam Athu Aethaenilae Nadantha Kalyaanam

Image
ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் – 3 டும் டும் டும் மேளம் இல்லை பிப்பி பிப்பி பிப்பி நாதம் இல்லை – 2 அலங்கார மேடையில கல்யாணத்துக்கு ஆளும் இல்லை மண்ணக்கட்டி மாப்பிள்ளை எலும்பு அக்கா பொண்ணு – 2 ஆதியிலே – 1 மண்ணக்கட்டி மாப்பிள்ளை ஆதாம் அண்ணச்சி பொண்ணு எலும்பு அக்காவும் ஏவாள் தானங்க – 2 தேவன் அவர் உறவிலே தினமும் இன்பம் கட்டுங்க – 2 ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் கல்மாணம் – 1 சாத்தான் வந்த வேளையில் பாவம் வந்தது பாவம் வந்த பின்னாலே சாபம் வந்தது -2 இன்பமெல்லாம் மாறிட்டு துன்பம் வந்து சேர்ந்தது – 2 மானிடரே மானிடரே நல்ல கேளுங்க மன்னன் இயேசு உறவிலே செழித்து வாழுங்க – 2 ஜெபம் வேத வாசிப்பும் ஜெயம் பெறு வாழ்விலே – 2

ஆத்துமவே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழுதேத்து|| Athumamey Yen Mullu Ullamey

Image
ஆத்துமவே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழுதேத்து இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள 2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத்தருளும், மேலான 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடி சூட்டும் 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே இதயமே, உள்ளமே, என் மனமே

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே | Asirvathikum Devan Unnai Asirvathiparey

Image
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் || Aa Nala Soobanam Anbaga

Image
ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம் 1. நேசர் தாமேபக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவர் 2. அன்றும்மை காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவர் நீர் செய்தீர் 3. நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றேஈய வாரும் 4. ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம் இயேசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர் மீது 5. என்றும் காத்தருளும் ஒன்றாய் இணைத்தோனே என்றும் சிலுவை ஆசனம் முன் கெஞ்சி நிற்கிறோம்

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே || Asirvathium Kartharey Aanantha

Image
1.ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே – வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் – வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க...

விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு Vinnyeluthu Sellum itha Jebapaatu

Image
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் 1. விண்ணகத்தந்தையின் அன்புப் பரிசாம் அன்னை மரியாள் மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மணியாம் சொல்லொண்ணாத் துயரம் நீங்கவே சொந்தங்கள் யாவும் சூழவே 2. நெஞ்சினில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள் மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள் அன்னையால் எதுவும் ஆகுமே அற்புதங்கள் கோடி நிகழுமே  

ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே | Jenmapaavam illamalaye Urpuvitha

Image
ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடிவந்தோம் நாயகியே மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே 1. பேய் மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய் தூய வெண்லீ லிமலர்போல் தோன்றினாயே பூமிதனில் 2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகின்றோம்

சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் | மாதா சுப்பிரபாதம் | Sawmi Kirubai Yairum

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி தயவாயிரும் கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும் கிறிஸ்துவே நன்றாகக் கேட்டருளும் பரத்தைப் படைத்த பிதா சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் உலகத்தை மீட்ட சுதன் சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் பரிசுத்த ஆவி சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் தமத்திரித்துவ ஏக சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் அர்ச்சயசிஷ்ட மரியாயே சர்வேசுரன் அர்ச்சய மாதாவே கன்னியரில் நல்ல கன்னிகையே கிறிஸ்துவினுடைய மாதாவே தேவப் பிரசாதத்தின் மாதாவே மகாப் பரிசுத்த மாதாவே அத்தியந்த விரத்தி மாதாவே பழுதற்ற கன்னி மாதாவே கன்னி சுத்தங் கெடாத மாதாவே அன்புக்குப் பாத்திர மாதாவே ஆச்சரியமான மாதாவே நல்லாலோசனை மாதாவே சிருஷ்டிகருடைய மாதாவே இரட்சகருடைய மாதாவே மகாப் புத்தியுள்ள கன்னிகையே வணக்கத்துக்குரிய கன்னிகையே ஸ்துதிக்க யோக்கியமான கன்னிகையே சக்தியுடைத்தான கன்னிகையே தயை மிகவுள்ள கன்னிகையே விசுவாசியான கன்னிகையே தருமத்தினுடைய கண்ணாடியே ஞானத்திற்கு இருப்பிடமே எங்கள் சந்தோஷத்தின் காரணமே ஞானம் நிறைந்த பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே அத்தியந்த பக்தியுள்ள பாத்திரமே தேவ ரகச...

அருணனை மடியாய் அம்புலி அடியாய் | Arunanai madiyaai Ambulii Adiyaai

Image
அருணனை மடியாய் அம்புலி அடியாய் ஆறிரு மீனினம் முடியாய் அணிந்த சிங்காரி அலகை சங்காரி அந்திரம் வான்புவி தாங்கும் 1. அனைத்துயர் ஜீவன் அருகுண தேவன் அம்புவி வந்தவி னோதன் அன்னை நீயாகும் அமலம்நீ யாகும் அடியவர் தாயும்நீ யாகும் 2. இருளினில் கிடந்த எமது முன்னோர்கள் இகபரி நின்சுதன் மார்க்கம் இசைந்ததும் உன்னால் இருப்பதும் உன்னால் இறப்பதும் உன் செயல் அன்றோ 3. இதைவிட வேறு இயம்பிடக் கூறு இம்மையும் மறுமையும் நீயே இணையற்ற அன்னை இடருற்ற என்னை இன்னமும் பாராமுகம் ஏனோ 4. கருணையும் எங்கே கவனமும் எங்கே கருதும் நின் மைந்தர் நானன்றோ கடிப்பகை மகிழும் காசினி இகழும் கௌரவம் யாவுமே பிறழும் 5. கதிவழி மறந்தே கண்ணியம் இழந்தே கானக விலங்கு போல் அலைந்தே கண்டதும் கேட்டதும் செய்ததும் பாவம் கடந்ததை மறந்தருளம்மா 6. திருவருள் புரியும் பொன்விழாச் சமயம் தீயவன் என் முகம் பாரும் திருந்துவேன் உண்மை சிறிதொரு புதுமை செய்யவும் குறைந்து போகாதே 7. திரைகடலோடி திரவியம் தேடி சிறப்புயர் செழியர் பொன்னாடு திருமந்திர நகரே திகழும் பொற்சுடரே திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே

கோவிலும் நீயே குருக்களும் நீயே | kovilum neeyae Gurukalum Neeyae

Image
கோவிலும் நீயே குருக்களும் நீயே கோபுர தெரிசனம் நீயே கோகுலம் தாவீது கோமளம் நீயே கோதையர் தெய்வமும் நீயே 1. கோடையும் கொண்டல் வாடையும் தென்றல் குணமதன் சக்தியும் நீயே கோதில்லாச் சித்தர் இறைவியும் நீயே குருபரன் அன்னையும் நீயே 2. காவியம் நீயே கண்மணி நீயே கடிப்பகை பயங்கரி நீயே கன்னியர் ஒழுக்கம் நடையுடை அடக்கம் கற்பலங் காரியும் நீயே 3. கரையிலும் நீயே கடலிலும் நீயே கவினுயர் தண்டலும் நீயே கலையிலும் நீயே நிலையிலும் நீயே கற்பக விருட்சமும் நீயே 4. பூவிலும் நீயே நாவிலும் நீயே புதுமைகள் அனைத்தும் நீயே பூர்வசு கந்த ஆனந்த ஞான புனிதம னோஹரம் நீயே 5. பூரணம் நீயே ஆரணம் நீயே பூசையில் வசனமும் நீயே பூதலம் ஆதி சாபவி மோசன புண்ணிய தீர்த்தமும் நீயே 6. பாவிலும் நீயே பாலிலும் நீயே படைப்புகள் முழுவதும் நீயே பரமமே இன்பப் பாதையும் நீயே பரிதிமீன் மதிசுடர் நீயே 7. பழகுமெய் யன்பர் பந்தியில் நீயே பாவிகள் தஞ்சமும் நீயே பார்புகழ் மந்தர நகரம் எழுந்த பனிமயத் தாய்மரி யாயே

ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள் | Jeeviyam Silla Nall Selvangal

Image
ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள் சிந்தனை கற்பனை சிலநாள் சிறப்புகள் சில நாள் செம்தொழில் சில நாள் ஜீவிய முடிவுநாள் ஒருநாள் 1. சிதறும்இவ் வாழ்வில் அடியவன் உந்தன் திருமகன் ஈரைந்து விதியில் சிறிதள வேனும் தவறிவி டாமல் திடம்எனக் கருளும் மாதாவே 2. ஆவிநாள் வரையும் அடியனென் கெதியாய் அன்றுகல் வாரியில் உனது அற்புதப் புதல்வன் அன்புடன் அளித்த அனந்தச காயமா தாவே 3. ஆண்டுநா னூறு அடியவர் அருகில் அடைக்கல மாகவே அமர்ந்து அலகையை உதைத்து அடியரை அணைத்து ஆதரித் தாண்டருள் சுகமே 4. நாவிலும் நினைவு நெஞ்சிலும் உனது நலந்திகழ் புனிதபொன் நாமம் நாள்தவ றாத வாசக மாக நன்றுமி ளிர்ந்திட வேண்டும் 5. நல்லது கெட்டது இன்னதென் றுணரும் நடுநிலை அரசியல் வேண்டும் நஞ்செனும் பஞ்சம் பசிப்பிணி அகன்று நாடுசி றந்திட வேண்டும் 6. தேவியுன் கருணைத் திருவிழி திறந்துன் சேயர்கள் முகமலர் பாரும் தேஜஸ்இ ழந்து வறுமையில் மெலிந்து சீரழிந்த லைவதைப் பாரும் 7. தேவுல கரசி ஏழைகள் இவர்பால் சித்தம் நீ இரங்கிட வேண்டும் தேனுயர் மந்த்ர நகரில் எழுந்த திவ்யதஸ் நேவிஸ் மாதாவே

அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே | Arulnirai mariyayey Andavar ummudaney

Image
அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர் பெற்றவள் நீரே உம் திருவயிற்றின் கனியவர் இயேசுவும் ஆசீர் பெற்றவரே வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க 1. புனித மரியாயே இறைவனின் தாயே பாவி எமக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென் வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க

சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே நின் மக்கள் எங்களுக்காய் | Sadha Saghaya Madha Sathiya Devathayae

Image
சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா 1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம் 2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா

புனித தோமாஸ் அக்குவைனஸ் || Saint Thomos Von Aquinas

Image
பிறப்பு - 1225, இத்தாலி இறப்பு - 7 மார்ச் 1274 புனிதர் பட்டம் - 18 ஜூலை 1323 திருவிழா - ஜனவரி 28  படங்கள்:

ஆண்டவரே இரக்கமாயிரும் || Andavarey Irakamairum

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்

தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன்|| Devalaiya vala puram irunthu

Image
தேவாலய வலப்புறமிருந்து  தண்ணீர் புறப்படக் கண்டேன்- அல்லேலூயா அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் -ஆமேன்.