விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு Vinnyeluthu Sellum itha Jebapaatu
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு
அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு
ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம்
1. விண்ணகத்தந்தையின் அன்புப் பரிசாம் அன்னை மரியாள்
மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மணியாம்
சொல்லொண்ணாத் துயரம் நீங்கவே
சொந்தங்கள் யாவும் சூழவே
2. நெஞ்சினில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள்
மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள்
அன்னையால் எதுவும் ஆகுமே
அற்புதங்கள் கோடி நிகழுமே
Comments