ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள் | Jeeviyam Silla Nall Selvangal
ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள்
சிந்தனை கற்பனை சிலநாள்
சிறப்புகள் சில நாள் செம்தொழில் சில நாள்
ஜீவிய முடிவுநாள் ஒருநாள்
1. சிதறும்இவ் வாழ்வில் அடியவன் உந்தன்
திருமகன் ஈரைந்து விதியில்
சிறிதள வேனும் தவறிவி டாமல்
திடம்எனக் கருளும் மாதாவே
2. ஆவிநாள் வரையும் அடியனென் கெதியாய்
அன்றுகல் வாரியில் உனது
அற்புதப் புதல்வன் அன்புடன் அளித்த
அனந்தச காயமா தாவே
3. ஆண்டுநா னூறு அடியவர் அருகில்
அடைக்கல மாகவே அமர்ந்து
அலகையை உதைத்து அடியரை அணைத்து
ஆதரித் தாண்டருள் சுகமே
4. நாவிலும் நினைவு நெஞ்சிலும் உனது
நலந்திகழ் புனிதபொன் நாமம்
நாள்தவ றாத வாசக மாக
நன்றுமி ளிர்ந்திட வேண்டும்
5. நல்லது கெட்டது இன்னதென் றுணரும்
நடுநிலை அரசியல் வேண்டும்
நஞ்செனும் பஞ்சம் பசிப்பிணி அகன்று
நாடுசி றந்திட வேண்டும்
6. தேவியுன் கருணைத் திருவிழி திறந்துன்
சேயர்கள் முகமலர் பாரும்
தேஜஸ்இ ழந்து வறுமையில் மெலிந்து
சீரழிந்த லைவதைப் பாரும்
7. தேவுல கரசி ஏழைகள் இவர்பால்
சித்தம் நீ இரங்கிட வேண்டும்
தேனுயர் மந்த்ர நகரில் எழுந்த
திவ்யதஸ் நேவிஸ் மாதாவே
Comments