கானாவூரின் கல்யாணத்தில் தான் | Kaanavorin kalyaanaththil thaanTheyvamakan thaamae puthumai seythaar
கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
இயேசு என் நேசர் போல்
2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
நேசர் என் இயேசு போல்
Comments