Posts

Showing posts from November, 2022

இறைமகன் இயேசு அழைக்கின்றார்

இறைமகன் இயேசு அழைக்கின்றார் இகத்தினில் நமக்கு வாழ்வளிக்க (2) இறைமகன் இயேசு அழைக்கின்றார் அல்லேலூயா அல்லேலூயா - 4 1. உயிரும் உணவும் நானே என்றார் எனை உண்டால் வாழ்ந்திடுவீர் (2) உலகின் ஒளியும் நானே என்றார் உண்மையின் வழியும் நானே என்றார் உலகினில் நமக்குப் புகலிடம் இவரே - 2 2. உன்னத இயேசுவின் பாதம் பணிவோம் உன்னை அன்பு செய்வது போல அயலானை நேசி என்றார் (2) உலகினில் எளியோர்க்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர் என்றுரைத்தார் - உலகினில் நமக்கு ... ...  

கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே Kalangina Nerangalil

Image
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும் சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கை உம்மையன்றி வேறு துணையில்லை

Aathumame En Muzhu Ullameஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து

Image
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன் Entha Kaalathilum Entha Nerathilum

Image
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த 2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த 6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த 7. ஞானமும் நீரே கானமும் நீரே தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த 8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த 9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த 10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த

இறைமக்களே கூடிவாருங்கள் உங்கள்இருகரமும் கூப்பி வாருங்கள்

இறைமக்களே கூடிவாருங்கள் உங்கள் இருகரமும் கூப்பி வாருங்கள் (2) உறுதியான நம்பிக்கையில் இறையிடம் வரம் கேளுங்கள் கேட்டதெல்லாம் கேட்டபடி கிடைத்ததென்று மகிழுங்கள் 1. கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே கல்தரையாய்க் காயச்செய்யலாம் அணு அளவு நம்பிக்கையால் இமயத்தையும் ஆழ்கடலில் மூழ்கச் செய்யலாம் உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது -2 என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய் 2. ஒருவார்த்தை சொன்னாலே போதுமையா ஒருகுறையும் இல்லாமல் போகுமையா உனதாடை விளிம்பை நான் தொட்டால் போதும் ஓடிவிடும் உடனடியாய் இந்நோய் என்றார் உன்னுடைய நம்பிக்கையே...

இறைமக்களே கதிரோன் முகம் நோக்கும் மலராய்இறைவன் முன்வருவோம்

இறைமக்களே கதிரோன் முகம் நோக்கும் மலராய் இறைவன் முன்வருவோம் (2) திருப்பலியினில் இணைந்து பலியாகும் இறைவன் அரசை அமைத்திடுவோம் (2) கிறிஸ்து மரித்தார் கிறிஸ்து உயிர்த்தார் மீண்டும் வருவார் என்றுணர்ந்தே அகில இறைவன் அரசை அமைக்க மீட்கும் பலியில் பங்கேற்போம் மீட்பர் பலியில் ஒன்றிணைவோம் 1. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள் அவரே நம்மைப் படைத்தவரே நாமோ அவர் மக்கள் (2) ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபட வாருங்கள் மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வருவோம் -2 (கிறிஸ்து) 2. நன்றியுடன் அவர் வாயில்களில் நுழையுங்கள் என்றும் பேரன்பு உள்ளவரே ஆண்டவர் நல்லவரே (2) அனைத்துலகோரே ஆர்ப்பரித்து அவரை வாழ்த்துங்கள் எழுச்சியுடன் ஒன்றிணைவோம் நன்மையின் பலியளிப்போம்- 2

இறைமக்கள் யாவரும் கூடிடுவோம்இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம்

இறைமக்கள் யாவரும் கூடிடுவோம் இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம் இறைப்பணி தனைசெய்ய அவர் அழைத்தார் அவர் புகழ் பாடிடுவோம் - 2 1. அன்பாலே இறைவன் தன்னைக் கொடுத்தார் அருளாலே நம்மை அரவணைத்தார் (2) நாம் அவர் மந்தையின் ஆடுகளாய் - 2 பலியாக நம்மைத் தெரிந்தெடுத்தார் அவர் அழைத்தார் அன்பில் பணித்தார் இறையரசு பெருகிடவே 2. குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில் குடும்பமாய் பலிதனைச் செலுத்திடுவோம் (2) இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம் - 2 இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம் அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம் இறையரசைப் பரப்பிடுவோம்

இறைமக்கள் ஒன்றுகூடுவோம் - தெய்வஇரக்கத்தை நாம் கொண்டாடுவோம்

இறைமக்கள் ஒன்றுகூடுவோம் - தெய்வ இரக்கத்தை நாம் கொண்டாடுவோம் (2) இதயங்களை எழுப்புவோம் உதயங்களைக் காணுவோம் - 2 இரக்கம் என்னும் நீரூற்றை அள்ளி அள்ளிப் பருகுவோம் 1. படைத்து நம்மைப் பாதுகாக்கும் தந்தையின் இரக்கம் வான் தந்தையின் இரக்கம் உயிரை ஈந்து உலகை மீட்கும் ஆண்டவர் இரக்கம் இயேசு ஆண்டவர் இரக்கம் (2) வரங்கள் பொழிந்து வழிநடத்தும் ஆவியின் இரக்கம் -2 இந்த இரக்கம் என்றும் நிலைத்திடும் இறைவன் அரசு மலர்ந்திடும் -2 அன்பு நீதி அமைதி வழியில் புதிய உலகு படைத்திடும் 2. பாவம் செய்து திரிந்த போதும் தேடிடும் இரக்கம் வந்து தேடிடும் இரக்கம் பாதை தேடி அலையும்போது தொடர்ந்திடும் இரக்கம் தொடர்ந்திடும் இரக்கம் (2) சுமைகளாலே துவளும்போது தாங்கிடும் இரக்கம் -2 இந்த இரக்கப்பெருக்கைப் போற்றுவோம் வியந்து நாமும் வாழ்த்துவோம் (2) வானம் புகழ்ந்து ஆடி மகிழ்ந்து இதய தீபம் ஏற்றுவோம்

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி - 2 திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2 1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2 புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம் இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய் 2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2 திருவாழ்வைத் தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம் பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம் மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் - வாராய்

இறை பலியினில் இணைந்திடுவோம்இறைவனில் கலந்திடுவோம்

இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள் ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள் (2) புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம் (2) 1. அன்பின் பாலமாகவே இறைவன் அழைக்கிறார் இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கிறார் (2) வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம் உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம் 2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கிறார் தொண்டு வாழ்வைத் தொடரவே இறைவன் அழைக்கிறார் (2) வாருங்கள் வாருங்கள் தோழமையில் இணையவே கூடுங்கள் கூடுங்கள் தொண்டு வாழ்வைத் தொடரவே - புதிய.

இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமேஇறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள்

இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள் ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள் (2) புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம் (2) 1. அன்பின் பாலமாகவே இறைவன் அழைக்கிறார் இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கிறார் (2) வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம் உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம் 2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கிறார் தொண்டு வாழ்வைத் தொடரவே இறைவன் அழைக்கிறார் (2) வாருங்கள் வாருங்கள் தோழமையில் இணையவே கூடுங்கள் கூடுங்கள் தொண்டு வாழ்வைத் தொடரவே - புதிய.

இறைகுலமே எழுக இறைபதமே வருக

இறைகுலமே எழுக இறைபதமே வருக - 2 புனித நன்னாளில் புகழ்ந்திடவே புதுவாழ்வில் தினம் திளைத்திடவே வேற்றுமை நீக்கி வெறுமையைப் போக்கி இறைவன் இயேசுவில் வாழ்ந்திடவே 1. பாதங்கள் கழுவிய பரமனின் தூய பணிதனைத் தொடர்ந்திடவே (2) பாரினில் எங்கும் அவரது திருமுகம் படைப்பினில் உணர்ந்திடவே பகிர்ந்திட வருவோம் நம்மையே தருவோம் -2 இகமதில் என்றும் சாட்சியாய் வாழ்வோம் 2. சிலுவையின் தியாகப் பலியினில் கலந்து சிறுமைகள் போக்கிடவே (2) சிந்திய இயேசுவின் குருதியினாலே அகவொளியாகிடவே அன்புறவாகும் அகிலத்தைக் காண - 2 அனைவரும் வருவோம் அவரிலே இணைவோம்  

இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள்

இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள் இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் (2) வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள் பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் (2) 1. உதயமாகும் இனிய உறவு வாருங்கள் உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள் பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள் பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள் 2. சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள் இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள் இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள் - நாம் அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம் கூடுங்கள்  

இருகரம் குவித்து சிரம்தனைத் தாழ்த்திஇதயத்தை எழுப்பி வணங்கிடுவோம்

இருகரம் குவித்து சிரம்தனைத் தாழ்த்தி இதயத்தை எழுப்பி வணங்கிடுவோம் (2) நம் இறைவனைத் துதித்திட வாரீர் நம் இயேசுவைப் புகழ்ந்திட வாரீர் (2) 1. அனைவரும் ஓரினம் அனைவரும் ஓருடல் அமைப்போம் புது உலகம் (2) இறையாட்சி அமைந்திட அன்பு செழித்திட மாட்சிமை கண்டிடுவோம் (2) 2. நாடுகளே நாம் நலமுடன் வாழ பாடுவோம் அமைதி கீதம் (2) இங்கு போட்டிகள் நீங்கி வறுமைகள் அகல நீட்டுவோம் அமைதிக்கரம் (2)

இயேசுவே என்றும் என்னுடன் இருந்துஎன்னை நடத்துமையா

இயேசுவே என்றும் என்னுடன் இருந்து என்னை நடத்துமையா என்னை முழுதும் உந்தன் பாதத்தில் அர்ப்பணம் தந்தேனய்யா (2) 1. கலங்காதே மகனே என்றழைத்து தம் கைகளில் என்னைத் தாங்குகின்றார் (2) கடவுள் நான் உன்னருகில் காலமும் இருப்பேன் என்கின்றார் -2 2. வலிமையும் திடமும் நானாவேன் நம் வலக்கரம் உன்னைக் காக்கும் என்றார் (2) எதிரிகள் உன்னைச் சூழ்ந்தாலும் என் பெயர் உன்னை மீட்கும் என்றார் (2)

இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்அமைத்திட எழுந்திடுவோம்

இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம் அமைத்திட எழுந்திடுவோம் - நம் இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும் இசையுடன் முழங்கிடுவோம் - 2 இறைகுலமே எழுக ஆ இறையரசே வருக - 2 1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி இயேசுவே நடந்து சென்றார் - நம் இறைவனின் அரசு அவர்களுக்குரியது என்பதை எடுத்துச் சொன்னார் (2) அந்த இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில் பயணத்தைத் தொடந்திடுவோம் (வாழ்க்கை) - 2 2. சிறைகளில் வாழ்வோர் விடுதலை அடைவர் என்று இயேசு சொன்னார் - அவர் ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையற்றோருக்கும் வழங்குவேன் வாழ்வு என்றார் (2) நம் விழிகளைத் திறந்து உலகினைப் பார்ப்போம் ஆவியின் வழிநடப்போம் தூய ஆவியின் வழிநடப்போம்  

இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள்

இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள் என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள் - 2 1. சந்தங்கள் பல வண்ணங்கள் உந்தன் பந்தங்கள் தினம் பாடுவேன் எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும் என் இன்ப சுகராகங்கள் நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள் என்றென்றும் நான் பாடுவேன் (2) 2. காலங்கள் பல நாளுமே உந்தன் கனிவான அருள் தாருமே தாகங்கள் இனி மாறுமே என்றும் என் ஆன்ம குறை தீருமே என் ஆயுட் காலங்கள் உன் அன்பில் நான் வாழ என் இல்லம் தங்கிடுவாய் (2)

இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திடஎழுந்திங்கு வாரீர் இறைமக்களே

இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட எழுந்திங்கு வாரீர் இறைமக்களே அன்பினில் கலந்திட அருளினில் வளர்ந்திட நிறைவுடன் வாரீர் மானிடரே எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே - 2 1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும் பெறுவது வாழ்வின் கொடையன்றோ (2) அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும் அகிலம் வாழும் வழியன்றோ (2) 2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட தன்னையே தந்தவர் இறைவனன்றோ (2) அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவதும் புதுயுகம் காணும் முறையன்றோ (2)

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கிறார் - 2 1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே - 2 இதய அமைதி இனிதே அடைய இயேசு அழைக்கிறார் - 2 2. கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரே - 2 கவலை நீக்கிக் கலக்கம் போக்கக் கடவுள் அழைக்கிறார் - 2

ஸ்தோத்திர பலி 91-100

Image
91.  பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம் 92.  தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம் 93.  எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 94.  பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம் 95.  தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம் 96.  தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம் 97.  சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம் 98.  சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம் 99.  கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம் 100.  கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 81-90

Image
81.  சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம் 82.  பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம் 83.  எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம் 84.  மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 85.  அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம் 86.  இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம் 87.  என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம் 88.  எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம் 89.  பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் 90.  இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 71-80

Image
71.  மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம் 72.  என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம் 73.  மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம் 74.  தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம் 75.  ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம் 76.  பெரிய தேவனே ஸ்தோத்திரம் 77.  ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம் 78.  குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம் 79.  விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம் 80.  ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 61-70

Image
61.  இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 62.  இரக்கத்தின் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 63.  நீதியின் தேவனே ஸ்தோத்திரம் 64.  நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம் 65.  நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 66.  சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம் 67.  என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம் 68.  என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம் 69.  என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம் 70.  தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 51-60

Image
51.  பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம் 52.  ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 53.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம் 54.  பாலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம் 55.  பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம் 56.  சத்திய தேவனே ஸ்தோத்திரம் 57.  இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம் 58.  வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம் 59.  உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம் 60.  நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்

என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு

Image
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன் வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன் நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் நன்றி நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் 1. பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன் பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன் பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன் பாதை தனைக் காட்டினார் நன்றி சொல்வேன் உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் 2. எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன் ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன் அழைப்பவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன் உள்ளம் தேடும் அமைதியை உணரச் செய்த இயேசுவை ஊரெங்கும் பாடியே நன்றி சொல்வேன்

இதோ இதோ ஒரு யாத்திரை - உம்இரக்கம் வேண்டும் திரு யாத்திரை (2)

இதோ இதோ ஒரு யாத்திரை - உம் இரக்கம் வேண்டும் திரு யாத்திரை (2) இதயத்தை தகர்க்கும் இடர்பாடிடையே உம்மையே நம்பும் யாத்திரை -2 ஓ இறைவா ஓ நல்லவரே என் கூக்குரல் கேட்டருளும் ஓ இறைவா ஓ வல்லவரே எம்மைக் காத்திட எழுந்தருளும் (2) 1. கடற்கடந்த எம் யாத்திரை எம் கைவிலங்கு தகரவே உடலுயிர் மறந்து போராடும் யாம் உம் துணையில் வெல்லவே (2) ஒடுக்கப்பட்டோரின் உயிர்ப்பே எம்மை உரிமைக் குலமாக்குமே - 2 2. இதயத்தினால் ஒரு யாத்திரை உம் இன்னுறவை அடையவே கதியற்று வாடும் சோதரர்க்கு கைகொடுத்து வாழவே (2) பகையற்று வாழும் அன்பின் உலகை உரிமையாய்த் தாருமே (எமக்கு) 2

ஆராதனை ஆராதனைஆராதனை உமக்குத்தானேஆராதனை ஆராதனைஆராதனை உமக்குத்தானே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு உம் சமுகமே போதும் அதுவே என் ஆனந்தம் உயிர் கொண்டேன் உம்மாலே உம்மாலே வாழ்கின்றேன் நீர் தந்த வாழ்வதனை உமக்கே தருகின்றேன் என்னை வனைந்திடுமே உமக்கே பயன்படுத்தும் என் மூச்சு திரும்போது உம்மடியில் சாயணுமே

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு விட்டு கொடுக்காத பேரழகு உயர் மலையோ உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு நிகர் இல்லாத தகப்பனுக்கு உயர் மலையோ

நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். / இவர் தூய ஆவியாரால் கருவுற்று / கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் / சிலுவையில் அறையப்பட்டு, / இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.  விண்ணகத்துக்கு எழுந்தருளி, / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். / அங்கிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க வருவார். / தூய ஆவியாரை நம்புகிறேன். / புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகிறேன். / புனிதர்களுடைய உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். / பாவ மன்னிப்பை நம்புகிறேன். / உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். / நிலைவாழ்வை நம்புகிறேன். - ஆமென்.

புதிய மங்கள வார்த்தை ஜெபம்

Image
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்

Image
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

தூய்மை மிகு நற்கருணை புகழ்

நிலையான புகழுக்குரிய தூய இறை நற்கருணைக்கு எல்லாக் காலமும் தொழுகையும், புகழும், போற்றியும், மாட்சியும் உண்டாகக் கடவது. நிலையான புகழுக்குரிய தூய நற்கருணைக்கு எல்லாக் காலமும் தொழுகையும் புகழும் உண்டாகுக

திருச்சிலுவை அடையாள செபம்

புனித சிலுவை / அடையாளத்தினாலே / எங்கள் எதிரிகளிடமிருந்து / எங்களை விடுவித்தருளும். / எங்கள் இறைவா / தந்தை, / மகன், / தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

மூவொரு இறைவன் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

சிலுவை அடையாளம்

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்

இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலேஇன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே

இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே இந்த அன்பென்னும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே இந்த சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள் இனிது வரைந்த கவிதையே 1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே 2. கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் ...  

1000 Praises 41-50

Image
1. God of Shadrach, Meshach and Abed Nego  we praise you -  Dan 3:28 2. God the Father  we praise you -  Tit 1:4 3. God of our fathers  we praise you -  Ezra 7:27 4. My father's God  we praise you -  Ex 15:2 5. God of the hills and valleys  we praise you -  1 Kg 20:28 6. God who answers Prayer  we praise you -  Isa 65:24 7. God of the whole earth  we praise you -  Isa 54:5 8. God who is overall, the eternally blessed  we praise you -  Rom 9:5 9. God of all kingdoms of the earth  we praise you -  Isa 37:16 10. God of heaven and earth  we praise you -  Ezra 5:11

1000 Praises 31-40

Image
1. God of my mercy we praise you - Ps 59:17 2. God who called me by His glory we praise you - Gal 1:15 3. God of Abraham, Isaac and Jacob we praise you - Ex 3:15 4. Give thanks to the LORD, for he is good; his love endures for ever we praise you - 1 Chr 16:34 5. I will Praise the LORD all my life; I will sing praise to my God, as long as I live we praise you - Ps 146:2 6. God of Jeshurun we praise you - Due 33:26 7. God of Israel we praise you - Josh 7:13 8. God of Elijah we praise you - 2 Kg 2:14 9. God of David we praise you - Isa 38:5 10. God of Daniel we praise you - Dan 6:26

1000 Praises 21-30

Image
1. The Most high God we praise you - Dan 4:2 2. Great God we praise you - Ps 95:3 3. God of gods we praise you - Ps 136:2 4. Living God we praise you - 1 Tim 3:15 5. Loving God we praise you - 1 Jn 4:8 6. God of Love and peace we praise you - 2 Cor 1:3 7. Eternal God we praise you - Due 33:27 8. God of all comforts we praise you - 2 Cor 1:3 9. God of patience and consolation we praise you - Rom 15:5 10. God of glory we praise you - Act 7:2

1000 Praises 11-20

Image
1. Father who established me we praise you - Deu 32:6 2. My Father we praise you - Matt 6:18 3. One Father of all we praise you - Mal 2:10 4. Father of our Lord Jesus Christ we praise you - 2 Cor 1:3 5. Righteous Father we praise you - Jn 17:25 6. Father who is in secret we praise you - Matt 6:6 7. Father of the righteous we praise you - Matt13:43 8. Father of Israel we praise you - Jer 31:9 9. Living Father we praise you - Jn 6:57 10. Father who is going to give the Kingdom with good pleasure we praise you - Lk 12:32

இதயங்கள் மலரட்டுமே நம்மில், Idhayangal Malaratum Nammil.

இதயங்கள் மலரட்டுமே நம்மில் இன்னிசை முழங்கட்டுமே (2) இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே 1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம் மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2) வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம் கரையில்லாக் கருணையால் நமை மீட்டார் 2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2) நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம் 3. இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் - நெஞ்சில் அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2) திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் - 2 அதை தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம்  

ஸ்தோத்திர பலி 41-50

Image
1.  சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம் 2.  பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம் 3.  பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம் 4.  பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம் 5.  அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம் 6.  வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம் 7.  சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம் 8.  சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம் 9.  மெய்யான தேவனே ஸ்தோத்திரம் 10.  ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 31-40

Image
1.  யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம் 2.  யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம் 3.  இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம் 4.  எலியாவின் தேவனே ஸ்தோத்திரம் 5.  தாவீதின் தேவனே ஸ்தோத்திரம் 6.  தானியேலின் தேவனே ஸ்தோத்திரம் 7.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம் 8.  பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம் 9.  முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம் 10.  என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 21-30

Image
1.  மகா தேவனே ஸ்தோத்திரம் 2.  தேவாதி தேவனே ஸ்தோத்திரம் 3.  ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம் 4.  அன்பின் தேவனே ஸ்தோத்திரம் 5.  அநாதி தேவனே ஸ்தோத்திரம் 6.  ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் 7.  மகிமையின் தேவனே ஸ்தோத்திரம் 8.  கிருபையின் தேவனே ஸ்தோத்திரம் 9.  ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம் 10.  ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திர பலி 11-20

Image
11.  என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம் 12.  என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம் 13.  எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம் 14.  இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம் 15.  நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம் 16.  அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம் 17.  நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம் 18.  இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம் 19.  ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம் 20.  உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்

இணையில்லா இறைவனின் திருப்புகழைஅனைவரும் இணைந்தே பாடிடுவோம்

இணையில்லா இறைவனின் திருப்புகழை அனைவரும் இணைந்தே பாடிடுவோம் (2) 1. அருள் நிறை ஆயன் அக்களித்து ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து (2) பரம்பொருள் அவன் பாதம் தனையே நாம் பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம் (2) 2. வானுற உயர்ந்த மலைகளுமே வண்ண எழில் நிறை மலர்களுமே (2) உனைத் தேடும் சின்ன உயிர்களுமே நிதம் உன்னத இறைவனை வாழ்த்திடுமே (2)

1000 Praises 1-10

Image
1. Abba Father  we praise you -  Rom 8:15 2. Loving Father  we praise you -  1 Jn 3:1 3. Everlasting Father  we praise you -  Isaiah 9:6 4. Heavenly Father  we praise you -  Matt 5:48 5. Father of Spirits  we praise you -  Heb 12:9 6. Father of lights  we praise you -  Jam 1:17 7. Father of Mercies  we praise you -  2 Cor 1:3 8. Father of glory  we praise you -  Eph 1:17 9. Father who created me  we praise you -  Deu 32:6 10. Let everything that has breath, Praise the LORD  we praise you -  Ps 150:6

ஸ்தோத்திர பலி 1-10

Image
1.  அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 2.  அன்பான பிதாவே ஸ்தோத்திரம் 3.  நித்திய பிதாவே ஸ்தோத்திரம் 4.  பரலோக பிதாவே ஸ்தோத்திரம் 5.  ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 6.  சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 7.  இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் 8.  மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம் 9.  என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம் 10.  என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பலியினிலே (2) கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம் மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம் 1. மூவொரு கடவுளர் முடிவில்லா பிரசன்னம் குடும்பமாய் இணைக்கின்றது நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2) பலியினில் கலந்து உறவினில் இணைய நம்மையே அழைக்கின்றது இன்று நம்மையே அழைக்கின்றது - கூடிடுவோம் ... 2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க பாதை காட்டுகின்றது - புதிய பாதை காட்டுகின்றது (2) சோதனை வென்று சாதனை படைக்க ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது கூடிடுவோம் ...

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும் ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும் மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) - 2 1. விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும் கடவுளின் கொடைகளில் - அதில் அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2) 2. புனித பூபாளம் இசைத்திட இணைவோம் வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2 சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து சமத்துவம் காணுவோம் - விண்ணவரின் ... ...

ஆனந்த கீதங்கள் முழங்கிட எமுவோம்ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம்

ஆனந்த கீதங்கள் முழங்கிட எமுவோம் ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம் (2) வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம் (2) வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம் 1. விடியலின் வேள்விகள் படைத்திடவே விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே (2) வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே 2. இறைவனைத் தேடிடும் உறவுகளே இறைவழி வாழ்ந்திட வாருங்களே (2) சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே

ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தேஆண்டவர் இல்லம் செல்வோம்

ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே ஆண்டவர் இல்லம் செல்வோம் (2) என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர அருள் வேண்டி பலியிடுவோம் (2) 1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2) கானமும் காற்றும் வேறில்லையே - 2 நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே 2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உம் விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2) மனதினைக் காக்கும் மாண்புடனே (2) மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்

ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள்

ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள் இந்த அவனியில் இறைவன் அரசினைக் காணும் ஆனந்தம் பாருங்கள் (2) 1. உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் இறைவார்த்தையின் பொருள் காணுங்கள் இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள் 2. உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் வறியோருக்கு வழிகாட்டுங்கள் வளம்பொங்கிட வகைகூறுங்கள்

ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களேஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே

ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2 சமபந்தி விருந்தில் சங்கமிப்போம் 1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம் நிறைவாய் பெறுவதே அருளென்போம் இருப்பதைப் பகிர்வதே சமமென்போம் நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2 இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு 2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி தன்னையே தருகின்ற தலைவன் வழி பகிர்வில் உயர்வு காணும் நெறி - இந்த உண்மையை நாளும் உணர்ந்திடவே -2 இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு

ஆலயத்தில் நாம் நுழைகையிலேபுது நினைவுகள் எழுகின்றன

ஆலயத்தில் நாம் நுழைகையிலே புது நினைவுகள் எழுகின்றன அந்த நினைவுகளின் புது வருகையிலே நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2) 1. அன்பான மகனைப் பலிகொடுத்த ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2) பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார் 2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன் இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2) என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்  

ஆண்டவரே உம் இல்லம் வருகிறேன் வருகிறேன்

ஆண்டவரே உம் இல்லம் வருகிறேன் வருகிறேன் - 2 வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன் வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் (2) ஆண்டவரே உன் இல்லம் வருகின்றேன் அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் தொழுகிறேன் - 2 (2) உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன் வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன் 1. அன்பினைப் பகிர்ந்திட வருகிறேன் உன் அருளினில் நனைந்திட வருகிறேன் உள்ளதை உவப்புடன் தருகிறேன் உன் ஒளியினில் வாழ்ந்திட விழைகிறேன் தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய் கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய் இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாகவா இமைகள் போல எனைக் காத்து நின்றாய் உன் கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய் இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற - என் இதயம் கலங்காமல் உறவாட உன் ஒளியினில் கலந்திடுவேன் 2. நானோ சிறுவனென்று விலகி நின்றேன் ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன் இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாக வா உமது வார்த்தைகளைப் பேசப் பணித்தாய் உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய் கடமை மறவாது பணி செய்ய என் கனவு நனவாக தினம் உழைக்க உன் உறவினில் கலந்திடுவேன்

ஆண்டவரின் திருச்சந்நிதியில்ஆனந்தமுடனே பாடுவோமே

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம் அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் (2) செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் (2) 1. பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவச் செய்வோம் மலைகள் குன்றுகளெல்லாம் தாழ்த்தி வைப்போம் (2) கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2 கரடுமுரடானவற்றை சமமாக்கி வழிநடப்போம் 2. மனிதரெல்லாரும் தமது மீட்பைக் காண கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் (2) மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் -2 விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது  

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம் அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் (2) செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் (2) 1. பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவச் செய்வோம் மலைகள் குன்றுகளெல்லாம் தாழ்த்தி வைப்போம் (2) கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2 கரடுமுரடானவற்றை சமமாக்கி வழிநடப்போம் 2. மனிதரெல்லாரும் தமது மீட்பைக் காண கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் (2) மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் -2 விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது  

ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல் ஆனந்தமுடனே

ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல் ஆனந்தமுடனே பாடுங்களே (2) இயேசுவின் நினைவில் மகிழுங்களே- 2 இந்த இகமதில் நாளும் முழங்குங்களே வாருங்களே- 4 1. உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும் இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால் அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால் ஆண்டவர் வழியினில் நடந்திடலாம் குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால் இயேசுவை அவரில் கண்டிடலாம் (2) இறைப்பணி தொடர இறையாட்சி மலர இணைந்திடுவோம் நாம் இறைவனிலே (2) 2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை இறைவன் இயேசு வருகையிலே நீதியும் உண்டு சமத்துவம் உண்டு இறைவன் வாழும் சமூகத்திலே அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால் இனிய உலகம் படைத்திடலாம் (2) குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால் புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் (2)

ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல

ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல ஆனந்த கீதங்களே நல்ல ஆனந்த கீதங்களே (2) 1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே நம் அவயங்கள் அருளிசை பாடிடுமே (2) நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ... - 2 அனைவரின் அன்பனை வாழ்த்திடவே 2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் - நம் மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் (2) இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ... 2 இதயத்தின் அன்பனை வணங்கிடவே

அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில் ஒன்றாகுவோம்

அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில் ஒன்றாகுவோம் இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம்(2) 1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து பாசத்தைப் பொழிந்தே வாழுவோம் (2) வேற்றுமை நிலைகளை மதித்திங்கு ஒற்றுமையுடனே பழகுவோம் அன்பிற்கு இலக்கணமாகிடவே அன்றாடம் உறவுகள் வளர்ந்திடவே ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம் இறைவன் விரும்பும் உலகம் படைப்போம் 2. பாகுபாடுகளை நாம் வெறுத்து பகிர்விலே சமத்துவம் காணுவோம் (2) பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு பிறரையும் நேசிக்கத் துவங்குவோம் உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே - ஒன்று சேர்வோம்.....  

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள் இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் இறையரசின் 1. இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும் அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் (2) பாவம் போக்கிட வேண்டும் கோபம் நீக்கிட வேண்டும் என்றும் - அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் - 2 2. ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும் அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் (2) மனிதம் மலர்ந்திட வேண்டும் புனிதம் அடைந்திட வேண்டும் அதனால் - இடைவிடாது நாம் செபிக்க வேண்டும் - 2

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2 1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2) பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2 பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம் 2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் இயேசு பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2) பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2 பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்

அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

அன்பின் விழுதுகள் படர்ந்திடவே மனித மாண்புகள் உயிர்த்திட மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே இறை உணர்வுகள் வாழட்டும் - 2 (2) 1. வழிபாட்டில் காணும் உணர்வுகள் நம் வாழ்வில் நதியாய்ப் பாயட்டும் (2) வேதத்தில் வாழும் பண்புகள் நம் மனதில் வாழ்வாய் அமையட்டும் (2) புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் -2 இனி வரும் நாளில் புது வாழ்வில் இறைஇன்பம் காண்போம் 2. வார்த்தைகள் பேசும் உண்மைகள் நம் இதயத்தில் உயிராய் வாழட்டும் (2) உரிமையில் பூத்த உறவுகள் புதுக் கவிதைகள் பாடி மகிழட்டும் - புதிய பாதையில் ... ...

அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே

அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள் அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2) பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2 படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள் 1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார் பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2) அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2 படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள் 2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார் வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2) நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2 இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

அற்புத அன்பனின் அடிதொழவே

அற்புத அன்பனின் அடிதொழவே அவரின் பாதம் அணி திரள்வோம் இத்தனை இகம் வாழ் உயிர்களுமே இயேசுவை வணங்கிடுமே (2) 1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம் ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2) ஆவியின் அருளால் அறவழி நடப்போம் அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2) அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம் ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2) 2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம் ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2) அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம் அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில் ... ...  

அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள் அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2) பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2 படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள் 1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார் பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2) அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2 படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள் 2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார் வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2) நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2 இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்  

அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்

அருட்கரம் தேடி உன் ஆலய பீடம் அலை அலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் (2) 1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2) மூழ்கிடும் வேளையில் எம் தலைவா உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும் பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளி இருக்க (2) நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் 2. ஆறுதல் தேடும் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றது (2) தேற்றிட விரையும் எம் தலைவா - உம் தெய்வீகக் கரம்தானே எமைத் தேற்றும் கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணை இருக்க (2) நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்  

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2) அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2) 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர் பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர் 2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர் உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர் உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர் அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர் கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர் அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்  

அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே (2) நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2 அவரன்றி வேறில்லையே 1. போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே (2) காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே (2) 2. இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே (2) பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே (2)  

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2) 1. அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள் இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2) எளியவர் வாழ்வில் துணைநின்று இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2) 2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம் மறைந்து ஒழிந்து போய்விடுமே (2) விண்ணில் பொருளை தினம் சேர்த்து இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)