கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே Kalangina Nerangalil
கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை
நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை
Comments