நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். / இவர் தூய ஆவியாரால் கருவுற்று / கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் / சிலுவையில் அறையப்பட்டு, / இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். 
விண்ணகத்துக்கு எழுந்தருளி, / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். / அங்கிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க வருவார். / தூய ஆவியாரை நம்புகிறேன். / புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகிறேன். / புனிதர்களுடைய உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். / பாவ மன்னிப்பை நம்புகிறேன். / உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். / நிலைவாழ்வை நம்புகிறேன். - ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு