ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே ||Ayiram Malarsollaigal yenthan
ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே
அருள் பொங்கும் ஆழகினிலே- என்றும்
ஆனந்தம் அலைபாயுதே உந்தன் கருணை விழிகளிலே-2
1. நாளெல்லாம் நலம் காப்பவள் எங்கள் அன்னை நீயல்லவா-2
பூவெல்லாம் நிதம் புனிதமாய் வந்து பூக்கும் உன்னடியே-2
பூங்கனம் தனை நீட்டியே பேருலகை காக்கும் அன்னை நீயே
அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே
அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே
2. மலர்முகம் தனை காட்டியே மனம் மகிழ்ச் செய்பவளே- 2
மலர்ந்திடும் வண்ண மலர்களில் தினம் பூத்து சிரிப்பவளே- 2
ஆனந்தம் பரமானந்தம் உனை காணும் விழிதனில் கருணை நிறைந்திட
அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே
அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே
Comments