அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா அருளைப் பொழிவதும் நீதானம்மா |Amma Amma Anbin Vadivamey
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா
1. மணிமுடி அணிந்த மாதவளே இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே (2)
உண்மையை ஊட்டிடும் பேரழகே எந்தன்
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே
2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ
துணை தந்து காத்திட வேண்டுமம்மா (2)
அன்பினில் என்றுமே அரவணைத்தென்னை
அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா
Comments