ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி எரியுதம்மா உன்ன சுத்தி பாட வந்தேன் உம்மை பற்றி பிறந்ததம்மா நல்ல புத்தி- Amma Vantitom Vantitom Nerungi Vanthitom

ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி
எரியுதம்மா உன்ன சுத்தி
பாட வந்தேன் உம்மை பற்றி
பிறந்ததம்மா நல்ல புத்தி
மெழுகு ஒளியில் பார்த்தேனம்மா உம் முகத்த
ஏழை சிறுவனுக்கு கொடுத்திடும்மா நல்ல வரத்த - (2)

அந்தோணியார் கோவிலில் தொடங்கிட்டோம் - பயணத்த
முழுசா செலுத்திட்டோம் அம்மா மேல - கவனத்த
எங்கள் ஆச நிறைவேத்த தொடங்கிட்டோம் - பயணத்த 
அழக பாத்தோமே அடயாரின் சீருபத்த
அங்க கூடும் ஜெனங்க ஜெபத்த சொல்லுது 
அந்த சந்தோஷத்தில அலையும் துள்ளுது
அந்த நீல கடலில் நீந்தி செல்லும் மீனும் கூட உயர்த்தி சொல்லுது 
மரியே நீ வாழ்கவென்றது
அந்த மீனும் கொடி மரத்த ஜெபித்து நின்றது
                    ‌‌‌                                       -ஏத்தி 

அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,
                                                     - ஆமென்

நடக்கவும் முடியல நம்பிக்கையும் குறையல
ஜெபித்தே எழுந்தேன் அம்மாவோட அருளுல
செஞ்ச பாவம் உருத்துதூ 
என்னுடைய மனசுல 
மன்டியிட்டு அழனுமா உன்னுடைய மடியில 
அம்மா வந்திட்டோம் வந்திட்டோம் நேருங்கி வந்திட்டோம் அந்த
நாகப்பட்டினம் கடந்து  வந்திட்டோம் கடலோரம் வெள்ளகோபுரம் அத பார்த்ததுமே அனந்தத்தில் அழுகதான் வரும் (2)
                                                               -ஏத்தி



Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு