Posts

Showing posts from January, 2023

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் | Devaney Arathekiren Deivamey

Image
தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழங்காள் படியிட்டு ஆராதிக்கின்றேன் யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவானிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் | Nadanmaadi Sotharipen Nadha

Image
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம்தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே அடைக்கலமானவரே

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் | Uthavi Varum Kanmalai Noki Parkinten

Image
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் | Yentum Aanatham Yen Yesu Tharukintar

Image
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார் அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவேன் சாத்தானின் சகல வலிமையை வெல்ல அதிகாரம் எனக்குண்டு 5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு என்றும் பதிலுண்டு என்னோடு இருந்து விடுதலை கொடுத்து என்னை உயர்த்துவார் 6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் பயமில்லை உன்னத தேவன் எனது அடைக்கலம் தங்கும் உறைவிடம் 7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு என்றும் விடுதலை அவரது நாமம் அறிந்த எனக்கு அவரே அடைக்கலம்

என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா | Yen Janamey Manamthirumpu Yesuvidam Odi Va

Image
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே உன் சாபங்கள் நீக்கிடவே முள்முடி தாங்கினாரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே | Thuuya Aaviaye Bagathargal Thunayanavarey

Image
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம் அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே-எங்கள் விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர்-தினம் அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் | Yesuvey Thudi sei manamey

Image
ஏசுவையே துதிசெய் பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா || Anbey Kalvari Anbaey ummai parkaialaye

Image
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே || Karthar mel Parathai vaithu Vidu

Image
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார்

எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம்|| Ekkalam Oothiduvom

Image
எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம்

ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும்|| Aiiya Umthiru Namam akilamellam

Image
ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணும் செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிசேஷம் சொல்லணுமே

என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்|| Yen Devaney Yen yesuvey Ummaiaye Nesikinten

Image
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் என் உள்ளமும் என் உடலும் உமக்காகத் தான் ஏங்குதையா துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் உலகம் எல்லாம் மாயையையா உம் அன்பு தான் மாறாதையா படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ||Pithavae Arathikindrom

Image
பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே 5. உமது செயல்களெல்லாம் அதிசயமானவைகள் உமது வழிகளெல்லாம் சத்தியமானவைகள்

இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்|| Retha Kootaikul Nan Nullaithu

Image
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப் போல நடத்துகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் – என்னை 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர்

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் ||Kalvari Pookalai Em Karangalil Yenthi vanthom

Image
கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2 காணிக்கை உமக்களிக்க - 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம் இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2) கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால் இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம் நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2) அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் - உள்ளம் ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான்|| Yacobin Devan Thunai irupar

Image
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலூயா நீ தினம் பாடு நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார் கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார் சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார் பசியுற்றோரை போஷிக்கின்றார் ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் நியாயம் செய்கின்றார் (நீதி)

எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்|| Jerusalem Jerusalem unnai

Image
எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார் ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் தயை செய்யும் காலம் வந்தது குறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் 2.துரத்துண்ட இஸ்ரவேலரை துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சீயோனை திரும்ப கட்டுகிறார் மகிமையிலே காட்சியளிப்பார் 3. பூமியின் ஜனங்களுக்குள்ளே புகழ்ச்சியும் கீர்த்தியுமவாய் உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 4. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமக்காரர் உன் மதில்மேல் அமரிக்கையாய் இருப்பதில்லை அமர்ந்திருக்க விடுவதில்லை 5. மலைகள் குன்றுகள் நடுவே மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மக்கள் இனம் தேடி வருவார்கள் ஓடி வந்து மீட்படைவார்கள் 6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால் தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்|| Rajavagiya Yen Devaney

Image
இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் உம் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் துதி உமக்கே கனம் உமக்கே மகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும் பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர் கையை விரித்து சகல உயிர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர் கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர் நம்பி கூப்பிடும் அனைவருக்கும் அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர் 5.அன்புகூர்கின்ற அனைவரின் மேல் கண்காணிப்பாய் இருக்கின்றீர் பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின் வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர் 6.தடுக்கி விழுகிற யாவரையும் தாங்கி தாங்கி நடத்துகிறீர் தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்||Yen Meel ketpathathelam

Image
úஎன் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லி மரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் எலிசா மேல் அமர்ந்த கரம் இறைவாக்கு சொல்ல வைத்த கரம் இரத்தத்திற்கு முன் எலியாவை ஓடவைத்த தெய்வ கரம்

கைதூக்கி எடுத்தீரே நான் உம்மைப் போற்றுகிறேன் ||Kai thooki Yedutheerey

Image
கைதூக்கி எடுத்தீரே நான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே உயிருள்ள நாட்களெல்லாம் நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனே என்று நான் கூப்பிட்டேன் நீர் என்னை குணமாக்கினீர் சாகாமல் பாதுகாத்தீர் 3. மாற்றினீரே அழுகையை போற்றி புகழ்கின்றேன் துயரம் நீக்கினீரே மகில்சியல் உடுத்தினீரே 4. இரவெல்லாம் அழுகையென்றால் பகலில் ஆனந்தமே கோபமோ ஒரு நிமிடம் தயவோ வாழ்நாளெல்லாம் 5. உன் தயவால் என் பர்வதம் நிலையாய் நிற்கச் செய்தீர் திருமுகம் மறைந்தபோது மிகவும் கலங்கி போனேன்

என்மீது அன்பு கூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க || Yen meethu Anbu Koornthu

Image
என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட -2 ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே -2 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே -2 மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2 கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் -2 மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட -2 அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய -2

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே || Akila Ulagam Nambum Nambikaiyae

Image
அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே-2 உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே-2 எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே -2 – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே-2 பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே-2 – என் நேசர் 3. வல்லமையின் தகப்பனே வியத்தகு ஆலோசகரே-2 நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே-2 – என் நேசர் 4. உம சமூகம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் -2 பேரின்பம் நீர்தானே நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர் 5. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது-2 காக்கும் தகப்பன் நீரே பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால் || Migutha Aaantham Santhosam

Image
மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் -2 நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 4. புல்லுள்ள இடங்களிலே இளைப்பாறச் செய்கின்றார்-2 அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே அனுதினம் நடத்துகின்றார்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்-2 தகப்பன் என்னோடு இருப்பதனால் தடுமாற்றம் எனக்கில்லையே-2 குறையில்லையே குறையில்லையே என் கர...

அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே || Adimai than Andavarey Yennai

Image
அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான் உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனி வெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில் இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம் இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயா கசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு|| Thedi Vantha Deivam Yesu

Image
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும்

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் || Yenn Pavangal Yen Yesu Mannithuvitar

Image
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் – நான் திரும்பி பார்க்க மாட்டேன் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் – என் நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே – நான் புதியன படைப்பானேன்

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் || Isravely Payapadathey Naney Un Devan

Image
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய்

யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் || Yar Yennai Kaivitalum Yesu

Image
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே || Singa Kuttygal Pattini Kidakum

Image
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்|| Nantri Nantri Nantri yentu Thuthikiren

Image
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன் நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா 1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே – நன்றி 2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் 3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே 4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு ||christuvuikul vazlum yenaku

Image
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு -3 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப்போகிறார் கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே || Ummodu irukanumey Aiiya Ummai pol

Image
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள் பண்ணணுமே கடினமான பாறை இதயம் உடைத்து நொறுக்கணுமே – நான் 5. வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே விசுவாசம் என்னும் கேடயத்தால் பிசாசை வெல்லணுமே – நான்

நல்லவர் நீர்தானே எல்லாம் ||Nallavar Neerthanae Ellam

Image
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானே எனது பெலனும் நீர்தானே என் கீதம் என் பாடல் எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன் கர்த்தர் பதில் தந்தீர் வேதனையில் கதறினேன் விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல் என் இதய கூடாரத்தில் கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால் கலங்கிட தேவையில்லை இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே அகமகிழ்வேன் அக்களிப்பேன் அல்லேலூயா பாடுவேன்

காணிக்கை தரும் நேரம் | Kanikkai Tharum Neram

Image
காணிக்கை தரும் நேரம்- நான் என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2 ஏற்ற‌ருளும் தெய்வ‌மே எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2 ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும் ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில் ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2 ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2 பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம் த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும் உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2 ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

கத்தோலிக்க திரு அவையின் (திருச்சபையின்) ஒழுங்குமுறைகள்

Image
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய் பங்கேற்க வேண்டும்; இந்த நாள்களின் புனிதத்தை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். 2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும் 3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று, நற்கருணை உட்கொள்ள வேண்டும். 4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உன்னாதிருக்க வேண்டும்; நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம். 5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும். 6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

பாவ மன்னிப்பு இறை வேண்டல்

எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.) ஆகையால், எப்போதும் கன்னியான புனத மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

ஒப்புரவு அருட்சாதனம் பெறும் முறை (பாவ சங்கீர்த்தனம்)

Image
1. செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல். 2. அவற்றிற்காக மனம் வருந்துதல். 3. இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல். 4. குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல். 5. நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.

பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்

என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.

புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்

Image
புனித செபஸ்தியார் ஆலயம் இடம்: கோமல் மாவட்டம்: நாகப்பட்டினம் மறைமாவட்டம்: தஞ்சாவூர் நிலை: கிளைப்பங்கு பங்கு: தூய இருதய ஆண்டவர் ஆலயம்; மாந்தை குடும்பங்கள்: 50 அன்பியங்கள்: இல்லை ஞாயிறு வழிபாடு: இல்லை வரலாறு:          சுமார் நூறு வருடங்கள் பழைமையான இந்த ஆலயமானது மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் ஜூபிலி விழா கண்டது குறிப்பிட்டத்தக்கது.   மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை மட்டும் திருப்பலி நடந்து வருகின்றது. புகைப்படங்கள்: நன்றி:  ஆலயம் அறிவோம் விக்கிப்பீடியா Google maps