கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் ||Kalvari Pookalai Em Karangalil Yenthi vanthom

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2
காணிக்கை உமக்களிக்க - 2
குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் - உள்ளம்
ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு