பெற்றோரின் செபம்

மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற உனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.

ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு