நல்லவர் நீர்தானே எல்லாம் ||Nallavar Neerthanae Ellam

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

1.எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே

2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்

3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்

4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு