மனைவியின் செபம்

புனித இறைஅன்னையே! நீர் சூசையப்பரோடு வாழ்ந்தபோது அவரது மனங்கோணாமல் நடந்துகொண்டீரே. ஏவையினுடைய மாசு தங்காத நீர் இப்படி நடக்க, நான் கணவருக்கு எதிராக என் சொந்த விருப்பு, வெறுப்புகளை நிலைநாட்டி வாழ முயல்வது சரியல்ல என்பதை உணருகிறேன். ஆகையால் நான் இராக்கேலைப் போல என் கணவரின் அன்புக்குரியவளாயும், இரபெக்காளைப்போல பிரமாணிக்கம் உள்ளவளாகவும் இருக்க உமது திருக்குமாரனை மன்றாடும். மேலும் என் மாமனார் மாமியார் முதலான பெரியோர்களாலேயும் உறவினர் பலராலும் ஒருவேளை நேரிடக்கூடிய தொந்தரவுகளைப் பொறுமையோடு சகிக்கவும், பிள்ளைகளாலே வரக்கூடிய சஞ்சலங்களைப் பொறுக்கவும் தேவையான வரங்களை எனக்குப் பெற்றுத்தந்தருளும். -ஆமென். 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு